பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இவை இயங்கவும் வளரவும் உணவு நீட்டிக்கொண்டிருக்கும் தேவை. உமிழ்நீர்ச் சுரப்பிகள் உணவுக் குழாய் உணவுப் பாதை இவ்வுறுப்புகள் அப்படியே நேரடி யாக ஏற்பதில்லை. அவற்றை உயி ரணுக்கள் மூலம் பெற பல்வேறு சீரண உறுப்புகள் தொடர் வினை யாற்றுகின்றன. அவை வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறு குடல், மலக்குடலாகிய பெருங்குடல் ஆகியனவாகும். உணவை வாயில் போட்டவுடன் வாயில் சுரக்கும் உமிழ்நீரினால் மெல் லும் உணவு விரைந்து கரைகிறது. உணவுக்குழாய் மூலம் அவ்வுணவா னது இரைப்பையை அடைகிறது. அங்கு கணைய நீர் மற்றும் பித்த நீர் களால் திட உணவு திரவ நிலைக்கு மாற்றப்பட்டு சிறுகுடலை அடை கிறது. சிறுகுடலின் உட்சுவர்களில் சீனா ஆயிரக் நாம் உண்ணும் உணவை கணக்கான சின்னஞ்சிறு மொட்டு கள் திரவ உணவிலுள்ள சத்தை உறிஞ்சுகின்றன. இவ்வாறு உறிஞ் சப்பட்ட சத்துணவு இரத்தத்தோடு கலந்து உடலின் பல்வேறு பாகங் களுக்குச் சென்று சக்தியளிக்கின் றன. நாம் உண்ணும் உணவு முழுவதும் இவ்வாறு சக்தியாக மாறுவதில்லை. சீரணிக்கப்படாத கழிவு பெருங்குடலா கிய மலக்குடல் மூலம் மலமாக வெளி யேற்றப்படுகிறது. சீனா. இன்று உலகத்திலேயே மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனா ஆகும். இதன் மக்கள் தொகை 105 கோடி ஆகும். இந்நாட்டின் பரப்பளவு 95,96,961 ச.கி.மீ. ஆகும். இந்நாட்டின் கிழக்குப் பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் மலைகளால் சூழப்பட்டுள்ளன. இம் மலைகளிலிருந்து உற்பத்தியாகி ஓடி சீனா வரும் பெரிய ஆறுகளில் யாங்ட்சி, ஹவாங் ஹோ ஆகியன முக்கிய மானவைகளாகும்.