பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டென்னிஸ் ஆகும். இங்குள்ள குதுப்மினார் கட் டிடம் உலகப் புகழ்பெற்ற கோபுரம் ஆகும்.இதன் உயரம் 72 அடியாகும். இதன் அருகே துருப்பிடிக்காத இரும் புத் தூண் ஒன்று உள்ளது. இது குப்த மன்னர் நிறுவியது ஆகும். 7 மீட்டர் உயரமுள்ள இத்தூண் ஒரே துண்டாக உள்ளது. இன்று வரை குதுப்மினார் அது துருப் பிடிக்காமல் இருப்பது வியப்பாக உள்ளது. அக்கால மக்க ளின் உலோகவியல் திறமைக்கு இத் தூண் ஒர் எடுத்துக்காட்டாகும். ஆங்கிலேயர்கள் இந்தியாவைஆளத் தொடங்கியபோது கல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக இருந்தது. இது கிழக்குக் கோடியில் இருந்தது. இந்தியாவின் மையமாகத் தலை நகரை அமைக்க விரும்பி டெல்லி யைத் தலைநகராக்கினர். 1912 முதல் டெல்லியே இந்தியாவின் தலைநக 189 ராக உளளது. பழைய டெல்லியை ஒட்டி புதுத் தலைநகர் உருவாக்கப் படலாயிற்று. இங்குள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், அரசுச் செயலகக் கட்டிடங்கள் ஆகி யன குறிப்பிடத் தக்கக் கட்டிடங்கள் ஆகும்.இங்குள்ள ஜந்தர் மந்தர் எனும் வானவியல் ஆய்வு நிலையம் 18ஆம் நூற்றாண்டில் ஜெய்ப்பூர் மன்னர் உருவாக்கியதாகும். டெல்லி 65 இலட்சம் மக்கள் தொகையும் 1,500 கி.மீ. பரப்பளவும் கொண்ட பெரும் நகரமாகும். இங் கிருந்து நாட்டின் அனைத்துப் பகுதி களுக்கும் தரை, விமான, இரயில் போக்கு வரத்து உண்டு. பழைய டெல்லியில் யமுனை ஆற் றங்கரையில் தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகள், பண்டித நேரு, லால் பகதூர் சாஸ்திரி, அன்னை இந்திரா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. டென்னிஸ்: உலகம் முழுவதும் பரவியுள்ள விளையாட்டு டென்னிஸ் ஆகும். இவ்விளையாட்டு சுமார் நூறு ஆண்டுகட்கு முன்பு இங்கிலாந்தில் உருவானது. இன்று உலகில் டென் னிஸ் விளையாடாத நாடே இல்லை எனலாம். டென்னிஸ் பந்து 6 சென்டிமீட்டர் விட்டம் உள்ளது. 56 கிராம் எடை உள்ளது. இதனை நரம்புக் கயிற்றால் நீள்வட்டத்தில் பின்னப்பட்ட மட்டை யால் அடித்து விளையாடுவர். டென்னிஸ் விளையாடும் மை தானம் 25 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் உள்ளதாக இருக்கும். இதன் நடுவே ஒருமீட்டர் உயரம் உள்ள வலை குறுக்காகக் கட்டப் பட்டிருக்கும். அதன் இருபுறத்திலும் பக்கத்துக்கு ஒருவராகவோ அல்லது இருவராகவோ நின்று விளையாடுவர்.