பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தமிழ் மொழியினை முத்தமிழ் எனச் சிறப்பித்துக் கூறுவர். அவை இயல், இசை, நாடகத் தமிழ் ஆகும். செய்யுள் வடிவிலும் உரைநடை வடிவிலும் எழுதப்பட்ட நூல்கள் இயற்றமிழ் ஆகும். இனிய ஓசை நயத்தோடு நம் உணர்வுகளை இத மாகத் தூண்டும் தன்மை படைத்த பாடல்கள் இசைத்தமிழ் ஆகும். இயற்ற மி ழும், இசைத்தமிழும் இணைந்த நிலையில் நாடகப் பாங் கோடு அமையும் இலக்கிய வகை நாடகத்தமிழ் ஆகும். சங்க நூல் களும் கம்பராமாயணம் போன்றவை இயற்றமிழுக்குச் சான்றாகும். தேவா ரம், திருவாசகம், பரிபாடல், திருப் புகழ், திருவருட்பா முதலிய நூல்கள் இசைத்தமிழ் நூல்களுக்கு உதாரண மாகும். கதையும், இ ைச யு ம் இணைந்து வரும் வகையில் உருவாக் கப்பட்ட பரதம், அகத்தியம் போன் றவை நாடகத் தமிழுக்கு எடுத்துக் காட்டுகளாகும். பதினெட்டாம் நூற் றாண்டில் குறவஞ்சி. பள்ளு வகையி லான நாடக நூல்கள் நிறைய இயற் றப்பட்டுள்ளன. சுந்தரம் பிள்ளை இன் மனோன்மணியம் சிறந்த நாடக நூலாகும். பரிதிமாற்கலைஞர் இயற் நிய நாடக நூலும், விபுலானந்த அடி கார்ரின் மதங்க சூளாமணியும் நாடக இலக்கண நூல்களாகும். சிலப் பதிகாரம் முத்தமிழ் நூலாகப் போற் றப்படுகிறது. இன்றுள்ள பழந்தமிழ் நூல்களுள் காலத்தால் மிக முற்பட்டதாகக் கருதப்படுவது தொல்காப்பியம்’ எனும் இலக்கண நூலாகும். இதன் :ம் 8,000 ஆண்டுகட்கு முற்பட்தாகும். இதற்கும் பல ஆயிரம் இன்டுகட்கு முன்பிருந்த தமிழில் இலக்கணப் பட்ைப்புகள் பல இருந்த தாகத் தெரிகிறது. தமிழ் தொல்காப்பியத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட நூல்கள் சங்க இலக் கியங்கள் ஆகும். இவை அகநானூறு: புறநானூறு என்ற பெயர்களால் திரட்டித் தொகுக்கப்பட்டுள்ளன. இவை கி. மு. 500 முதல் கி. பி, 200 வரையில் எழுதப்பட்டவைகளாகும். இந்தக் கால எல்லைக்கு முன்னும், பின்னுமாக இயற்றப்பட்டவைகள் சிலப்பதிகாரம், மணி மே க ைல போன்ற காப்பியங்கள். கி. பி. இரண் டாம் நூற்றாண்டிற்குப் பிறகு கி. பி. 1200ஆம் ஆண்டு வரை இயற்றப் பட்ட நூல்கள் இடைக்கால இலக்கி யங்களாகும். அவற்றுள் தலைசிறந் தது கம்பராமாயணம் ஆகும். அதன் பிறகு உருவாக்கப்பட்ட இலக்கியங் கள் தற்காலப் படைப்புகளாகும். பண்டைக் காலம் முதலே சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தனர் தமி ழர். மூன்று சங்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதல் இரு சங்க காலங்களில் இயற்றப்பட்ட நூல்கள் கிடைக்கவில்லை. கடைச் சங்க கால நூல்கள் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என்ற பெயரில் தொகுக்கப் பட்டுள்ளன. இதே காலத்தில் உரு வாக்கப்பட்ட நீதி நூல்கள் பதினென் கீழ்க்கணக்கு என்னும் பெயரில் தொகுத்து வழங்கப்படுகிறது. சிதச் குறள், நாலடியார் போன்றவை இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இடைக் காலத்தில் பக்தி இலக்கி யங்கள் பெருமளவில் இயற்றப்பட் டன. நாயன்மார்களும், ஆழ்வார். களும் பக்தி இலக்கியங்களை எழுதிக் குவித்தனர். பிற்காலத்தில் தமிழர் ஆட்சி வலு வீழ்ந்து போகவே வேற்று நாட்டவர் ஆட்சி தமிழகத்தில் தலைதுாக்கியது. முஸ்லிம்களும் விஜயநகர நாயக்கர்