பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாஜ்மஹால் மண் படிவதால் நிலவளம் மிகுந்து காணப்படுகிறது. போதிய அளவு நீர் வளமும் இருப்பதால் அதிக அள வில் நெற்பயிர் விளவிக்கப்படுகிறது. உலகில் மிக அதிகமாக நெல் விளை யும் நாடுகளில் இந்நாடும் ஒன்றாகும். இந்நாட்டில் கிடைக்கும் தாதுப் பொருள்களில் வெள்ளியம் குறிப் பிடத்தக்க உலோகம் ஆகும். நிலக் கரியும் இங்கு கிடைக்கிறது. இங் கிருந்து நெல், தேக்கு, ரப்பர் முதலி யன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகிறது. இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் ஐந்து கோடியாகும். "தாய்' என்பது மங்கோலிய இனத்தின் ஒரு பிரிவைக் குறிப்பதாகும். அப்பிரிவின ரின் பெயரிலேயே இந்நாடு தாய் லாந்து' என அழைக்கப்படுகிறது. "தாய் மொழி மிகப் பழமையான மொழியாகக் கருதப்படுகிறது. இது 'சீய மொழி என்றும் அழைப்படுவ துண்டு. தாய்லாந்தின் முக்கிய தொழில் வேளாண்மைத் தொழிலாகும். இங் குள்ள மக்களின் முக்கிய உணவு அரிசி ஆகும். தாய்லாந்து மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள். இங்கு புத்தருக்குப் பல கோயில்கள் உள்ளன.அவற்றுள் படுத்த நிலையில் உள்ள புத்தர் ஆல யமும் உட்கார்ந்த நிலையில் உள்ள புத்தர் கோயில்களும், நிற்கும் நிலை யில் உள்ள புத்தர் கோயிலும் குறிப் பிடத்தக்கவைகளாகும். இங்கு மரக தத்தால் செய்த புத்தர் கோயிலும் உண்டு. தாய்லாந்துப் பண்பாட்டில் இந் தியப் பண்பாட்டின் செல்வாக்கு மிகுதியாகக் காணப்படுகிறது. இவற் றின் சாயலை கட்டிடக் கலையிலும் சிற்பங்களிலும் நட னம், இசை முக 179 லிய கலைகளிலும் இன்றும் காண லாம். இங்கு தமிழ்க் கல்வெட்டு களில் சிலவும் கிடைத்துள்ளன. தாய் மொழியில் சமஸ்கிருதச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் கலந்து உள்ளன. 1982ஆம் ஆண்டு வரை இந்நாடு மன்னர்களின் முழு அதிகாரத்தின் கீழ் ஆளப்பட்டு வந்தது. இன்று மன் னர் தலைமயேற்றபோதிலும் ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளைக் கொண்ட நாடாளுமன் றத்தாலும் அமைச்சரவையாலுமே ஆளபபட்டு வருகிறது. தாஜ்மஹால்: உலகில் உள்ள அழகான கட்டிடங்களில் ஒன்றாக தாஜ்மகால் கருதப்படுகிறது. இது முழு வெண் சலவைக் கற்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா எனுமிடத்தில் யமுனை நதிக் கரையில் அமைந்து உள்ளது. மொகலாய மாமன்னர் ஷாஜஹான் இறந்த தன் அன்பு மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டிய கட்டிடம் ஆகும். மும்தாஜ் மகால் என்றால் அரண்மனையின் அணி கலன்' என்பது பொருள் ஆகும். பெரும் செலவில் மொகலாய பாணி யில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டுள் ளது. இதனைக் கட்டி முடிக்க 21 ஆண்டுகள் பிடித்தன. ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பார சீகத்திலிருந்தும் கட்டிடக் கலைஞர் கள் வந்து கட்டிடத்தை அழகு படுத் தினர். முழுவதும் சலவைக்கல்லால் ஆன இக்கட்டிடத்தின் உட்பகுதிகள் அழகிய பூவேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இஸ்லாமிய இறை மறையான திருக்குர்ஆன் வாசகங் கள் பொறிக்கப்பட்டுள்ளன. நில வொளியில் தாஜ்மகால் மிக அழகாகக் காட்சி அளிக்கும்.