பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 செய்வதில் ஜப்பான் சிறந்து விளங்கு. கின்றது. முத்து கடலடியில் காணப்படும் முத்துச் சிப்பியிலிருந்து எடுக்கப்படு கிறது. கடினத்தன்மை குறைந்தது. ஒளி ஊடுருவ வல்லது. முத்து வெண் மை நிறமாக இருக்கும். இளம் சிவப்பு, நீலம், கருப்பு ஆகிய வண்ணங்களில் முத்து கிடைப்பது உண்டு. தூத்துக்குடியில் கிடைக்கும் முத்து உயர்தரமானதாகக் கருதப்படுகிறது. முத்துக்குளிப்போர் கடலடியில் மூழ் கிச் சென்று சிப்பிகளைச் சேகரித்து முத்து எடுக்கின்றனர். ஜப்பான் நாட்டில் செயற்கை முறையில்முத்துச் சிப்பிகளில் முத்துகளை வளர்த்து புதிய முறையில், முத்துகளைச் சேகரிக்கிறார்கள். இந்தியா,இலங்கை பாரசீக, ஜப்பானிய கடற்பகுதிகளில் கிடைக்கும் முத்துகள் உயர்தரமான வையாகும். காக்கு: நாம் உண்ணும் உணவு சுவைத்து உண்ணவும் விரும்பும் ஒலிகளை எழுப்பவும் சொற்களைத் திருத்தமாக உச்சரித்துப் பேசவும் இன்றியமையாத உறுப்பாகப் பயன் படுவது நாக்காகும். உடலில் ஏற்படும் சில நோய் களை நாக்கில் காணும் நிற வேறு பாடுகளைக் கொண்டு மருத்துவர் எளிதாகக் கண்டறிவார். நாக்கு தசைநார்களால் உருவான உறுப்பாகும். நாக்கின் பின்பகுதி எலும்போடு இணைந்திருக்கும். நாக் குத் தசையின் மீது வழவழப்பான உமிழ்நீர் எப்போதும் படிந்திருக்கும். நாக்கில் எலும்பு ஏதும் இல்லாததால் நீட்ட, வளைக்க, மேல் நோக்கி அண்ணத்தை அழுத்த இயலுகிறது. நாகாலாந்து . நாக்கின் நாற்புற ஓரங்களிலும் சுவை அரும்புகள் உள்ளன. இவற் றின் மீது படும் உணவுப் பொருளின் சுவைத் தன்மையை உடனே இவற் றின் நரம்புகள் மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. இதன் மூலம் நாம் சுவை உணர்திறனைப் பெறுகிறோம். நாக்கின் அமைப்பு நாக்கில் உள்ள சுவை அரும்புகள் ஒவ்வொரு வகைச் சுவையை அறிய உதவுகின்றன. நாக்கின் முன்பகுதி முனை இனிப்புச் சுவையை அறியவல் லது. பக்கங்களில் உள்ள சுவை அரும்புகள் உப்பு, புளிப்புச் சுவை களை அறிய உதவுகிறது. நாக்கின் பின்பகுதி மூலம் கசப்புச் சுவையை உணரலாம். நாக்கின் நடுப்பகுதி மூலம் எந்தச் சுவையையும் அறிய இயலாது. ஏனெனில் அங்கு சுவை அரும்புகள் இல்லை. நாகாலாந்து: இந்திய மாநிலங் களுள் ஒன்றான இது வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. இம் மாநிலத்தின் பரப்பளவு 16,500 கி.மீ. ஆகும். இதன் வடக்கிலும் மேற்கிலும் அசாம் மாநிலம், தெற்கே மணிப்புரி மாநிலம், கிழக்கில் மியான்மார் என அழைக்கப்படும் பர்மா நாடு எல்லை . களாக உள்ளன. இம்மாநிலத்தின்