பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணயங்கள் மக்கள் தொகை சுமார் 8 இலட்சம் ஆகும். இம்மாநிலத்தின் தலைநக ராக கொஹிமா அமைந்துள்ளது. நாகலாந்து மலைக் குன்றுகளும் காடுகளும் நிறைந்த வன வளமிக்க மாநிலம் ஆகும். மூங்கில், பிரம்பு, கட்டிடங்கள் கட்டுமானத்துக்கான மரங்கள் அதிகமாகக் கிடைக்கின் றன. காட்டுப்பிரதேசம் ஆகையால் வேட்டையாடுவது முக்கியத் தொழி லாக அமைந்துள்ளது. மலைச் சரிவு , களிலும் சமவெளிப்பகுதிகளிலும் வேளாண்மை சிறப்பாக நடைபெறு கிறது. மழை வளமும் அதன் மூலம் நீர் வளமும் பெற்றுள்ள இம் மாநிலத்தின் மற்றொரு முக்கியத் தொழில் மீன் பிடித்தலாகும். கால் நடை வளர்ப்பு குறிப்பிடத்தக்க மற் றொரு தொழிலாகும். நாகர்களின் இசையும் நடனமும் தனிச் சிறப்பானவைகளாகும். - நாடாளுமன்றம்: நம் நாட்டின் முழு அதிகாரம் கொண்டது மத்திய அரசாங்கம். நாட்டை ஆளுவதற்கு வேண்டிய அதிகாரங்களை சட்ட வடிவில் இயற்றும் மாமன்றமே நாடாளுமன்றம். இது லோக்சபா' என்று அழைக்கப்படுகிறது. நாட்டை ஆளும் அதிகாரம் மக் களுக்கே உண்டு. குடிமக்கள் எல் லோரும்ே நாட்டை ஆள முடியாது. ஆகையால் அவர்கள் தங்கள் வாக் குரிமை மூலம் மக்கள்தொகை அடிப் படையில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். இவர்களே சட்டமியற்றும் அதிகாரம் படைத்த நாடாளுமன்ற உறுப்பினர் களாகப் பணியாற்றுகிறார்கள். நாட்டை ஆளுவதற்கான சட்ட அ தி கா ர த் ைத நாடாளுமன்றம் 18? அமைச்சரவைக்கு அளிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண் ணிக்கை மக்கள்தொகை அடிப்படை யில்நிர்ணயிக்கப்படுகிறது.பதினெட்டு வயதுநிறைந்த ஆண், பெண் அனை வருக்கும் வாக்குரிமை உண்டு. இவர் கள் தங்கள் நாடாளுமன்றப்பிரதிநிதி களைத் நேரடியாகவே தேர்ந்தெடுக் கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இந்தியாவின் நாடாளும் மன்றம் நாடாளுமன்றத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே கலைக்கவோ அல்லது தேர்தல் நடத்த ஆணை யிடவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. நாடாளுமன்றம் ஆண்டிற்கு எத்தனை முறை கூட வேண்டும் என்பதற்கு விதிமுறை கள் உண்டு. நாணயங்கள்: பொருட்களை விற் பதற்கும் வாங்குவதற்கும் நாம் நாண யங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த நாணயங்களை அச்சிட்ட தாள் வடிவிலும் உலோக வடிவிலும் பயன் படுத்துகிறோம். நாணயங்களை அச்சிடும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும் எனத் தனித்தனியே நாணய முறைகள் உண்டு. ஒரு நாட்டு நாணயம் இன் னொரு நாட்டில் செல்லுபடியாவது இல்லை.