பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போ ஸ் பெட்ரோலியம்: - பெட்ரோலியம் என்ற சொல்லுக்குக் கல் எண்ணெய்" என்பது பொருளாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் நீரிலும் நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்களும் தாவரப் பொருட் களும் மண்ணுள் புதைந்து போயின. இவை நாளடைவில் மண்பாறை. மணற்பாறை, சுண்ணாம்புப் பாறை அடுக்குகளிடையே சிக்கி நீர்த்தன. இவை நிலத்தடி வெப்ப அழுத்தத் தால் திரவ நிலையில் பெட்ரோலிய மாகவும் நிலத்தடி வாயுவாகவும் ஆயின என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். நவீன கருவிகளின் துணை கொண்டு பெட்ரோலியம் இருக்கு 真っ 竺、 ঢ়েপ্ৰস্ত্র ত্র முஇ പ്പു జె2డ: * s:SՀՏ āర్త பெட்ரோலியம் எடுத்தல் மிடத்தைக் கண் ட றி கிற ர் கள். துளைக் கருவிகளைக் கொண்டு பெட்ரோலை வெளியே எடுக்கின்ற னர். இது பார்ப்பதற்கு மஞ்சள் அல் லது பழுப்பு நிறமாக இருக்கும். இது ஆர்சா எண்ணெய் எனக் கூறப்படு கிறது. இது 20 அடி ஆழத்திலும் கிடைக்கலாம். 10,000 அடி ஆழத் திலும் கிடைக்கலாம். 199 கிடைக்கும் கச்சா எண்ணெய் சுத்தி கரிப்பாலைக்குக் கொண்டு சென்று சுத்திகரிப்பார்கள். அங்கு இது பெட் ரோல், மண்ணெண்ணெய், டீசல் எண்ணெய், எரி எண்ணெய், தார் முதலிய பலவகைப் பொருள்களாக பகுத்தெடுக்கப்படுகிறது. அரேபியா, ஈரான், ஈராக், அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, சோவியத் நாடுகளில் நிறைய பெட்ரோல் கிடைக்கிறது. இந்தியாவில் அசாம், குஜராத், பம்பாய், கடலடி, காவேரி, கோதாவரிப் படுகைகளில் பெட் ரோலும் நிலத்தடி இயற்கை வாயும் கிடைக்கின்றன. போஸ் (சர் ஜகதீச சந்திர போஸ்): மனிதர்களுக்கு உயிரும் உணர்ச்சி யும் இருப்பது போன்று தாவரங்களுக் கும் உண்டு என்பதை அறிவியல் பூர் வமாகக் கண்டறிந்து கூறியவர் போஸ். இவா பங்களாதேஷின் தலைநக ரான டாக்காவுக்கு அருகில் உள்ள சிற்றுரில் 1858ஆம் ஆண்டு பிறந் தார். கல்கத்தாவிலும் இலண்டனிலும் படித்துப் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பி கல்கத்தா கல்லூரியொன் றில் இயற்பியல் ஆசிரியராகப் பணி யில் அமர்ந்தார். அறிவியல் ஆய்வில் பேரார்வம் கொண்ட இவர் புதுப்புது அறிவியல் உண்மைகளைக் கண்டறி வதே தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டார். தான் சேர்த்த தொகை யைக் கொண்டு தனி ஆய்வுக்கூடம் அமைத் துப் பரிசோதனைகளைச் செய்து வந் தார். அரசு உதவியும் அவர் முயற் சிக்குக் கிடைத்தது. அவர் நிறுவிய ஆய்வுக்கூடம் போஸ் ஆராய்ச்சிக் கழகம் என அழைக்கப்பட்டது. இவ