பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்லாண்டிக் பெருங்கடல் பல காகிதங்களை ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டி கெட்டியாகத் தயாரிக் கும் அட்டை ஒட்டு அட்டை' எனப் படும். இந்த வகை அட்ட்ைகள் அச்சுத் தொழிலில் அதிகம் பயன்படு கின்றன. இதைக் கொண்டு சிறு அட்டைப் பெட்டிகள் செய்யப்படு கின்றன. மற்றொரு வகை அட்டை வைக் கோலை நன்றாக கொதிக்க வைத்து கூழாக்கி அட்டை செய்யப்படுகின் றன. இவை மிகவும் கெட்டியாக இருக்கும். புத்தகத்திற்கான அட்டை களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றொரு வகை 'பிரிஸ்டல் அட்டை' என்பதாகும். இது மிகவும் நேர்த்தியாகச் செய்யப்படுகின்றன. இது ஓவியம் வரைய மிகவும் ஏற்ற தாகும். அட்டை (புழு): இது நீரிலும் தரை யிலும் வாழும் ஒருவகைப் புழு ஆகும். ஒரே அட்டையில் ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் உள்ள இருபால் உயிர் இனமாகும். அட்டைகளில் பலவகைகள் உள்ளன. அவற்றின் வாழ்க்கை முறையும் பலவாகும். மற்றொரு வகை பிராணி களின் உடம்பில் ஒட்டிக் கொண்டு அவற்றின் இரத் தத்தை உறிஞ்சி உண்டு வாழ்கின்றன. சிலவகை அட்டைகள் மண்புழு, பூச்சிகளைப் பிடித் , துத் தின்று வாழ்கின்றன. o § அட்டையின் உடல் தட் டையாக இருக்கும். அட்டை அட்டை யின் முன் முனையிலும் பின் - முனையிலும் இரத்தம் உறிஞ்சும் உறிஞ்சிகள் இருக்கும். அட்டை ஒரு முறை இரத்தம் உறிஞ்சினால் பல 18 மாதங்கள் உணவின்றி உயிர் வாழும். கருமை நிறமுடையவை. ஆறு அங்குல நீளம்வரை வளரும். அட்டைகளால் பெரும் ஆபத்தும் உண்டு. சில சமயங்களில் நீரில் குளிக்கும் மனிதர்கள், மாடு போன்ற பிராணிகளின் காது, மூக்குக்குள் புகுந்துவிடும். இதனால் இரத்தப் பெருக்கு ஏற்படும். சில சமயம் உயி ருக்கு ஆபத்தும் விளைவதுண்டு. சில உடற்புண் நோய்களின்போது கெட்ட இரத்தத்தை உறிஞ்சி எடுக்க அட்டைகளைப் பயன்படுத்துவது உண்டு. நீரிலும் ஈரத் தரையிலும் இவை விரும்பி வாழும். அட்ரினல் சுரப்பி : அட்ரீனல் சுரப்பி எனும் அண்ணிரகச் சுரப்பி ஒரு நாளமில் சுரப்பியாகும். இவை ஒவ்வொரு சிறுநீர்ப்பைக்கும் மேற் புறத்தில் ஒன்று வீதம் அமைந்துள் ளன. இவை முக்கோண வடிவில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளன. அண்ணிரகச் சுரப்பியின் உட்பகுதிக் குப் புறணி என்று பெயர். இந்தச் சுரப்பியின் எடை சுமார் 12 கிராம் இருக்கும். இந்நாளமில்லாத சுரப்பிகள் ஹார் மோன்’ எனும் ஊக்கிகளை நேரடி யாக இரத்தத்தில் சுரக்கின்றன. ஊக்கிகளின் முக்கிய பணி திசுக் களைத் தூண்டுவதாகும். இச்சுரப்பி கள் வெவ்வேறு வகையான ஊக்கி களைச் சுரக்கின்றன. மனிதர்களோ மிருகங்களோ அதி கம் உணர்ச்சி வசப்படும்போது அதிக அளவில் ஊக்கி கரக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடல்: உலகி லுள்ள பெருங்கடல் (சமுத்திரம்) களில் இரண்டாவது மிகப் பெரிய