பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கு வங்காளம் வழிப்பாட்டைப் பேணிவந்த அரபு மக்கள் இவரது கருத்தை ஏற்காது எள்ளி நகையாடினர். அடித்துத் துன் புறுத்தினர். எனினும், மனஉறு மிக்க முகம்மது நபி (சல்) நீண்ட தொலைவுக்கப்பால் உள்ள மதினா சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யலானார். இவ்வாறு முகம்மது நபி (சல்) மக்காவிலிருந்து மதினா சென்றதை ஹிஜ்ரத் என்று அழைக் கின்றனர். இதிலிருந்தே இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி தொடங்குகிறது. மதினா நகர மக்களின் துணை யோடு மக்காவை வெற்றிகொண்டார். அதன்பின் இஸ்லாமிய மார்க்கம் வேகமாக உலகெலாம் பரவியது. படிக்காதவராயினும் நபிகள் நாயகம் முகம்மது நபி(சல்) அவர்களின் வாழ் வும் வாக்கும் இறைவேதமான குர் ஆனுக்கு விளக்கமாக அமைந் துள்ளன. மேகாலயா: இந்திய மாநிலங்களில் ஒன்றான மேகாலயா இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள் ளது. தெற்கே - மையும் எல்லைகளாகக் கொண்ட மாநிலமாகும். சுமார் பதினைந்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட மேகாலயாவின் மொத்தப் பரப்பளவு 22,480 கிலோ மீட்டர் ஆகும். மேகாலயா மலைப்பாங்கான மாநில மாகும். இதன் மலைச் சரிவுகளில் தேயிலை பயிராகிறது. அடர்ந்த காடுகள் எங்கும் நிறைந்துள்ளதால் ரப்பர் மரங்கள் மிகுதியாக உள்ளன. காடுகளும் மலைகளும் நிறைந்த இப் பகுதி மழை வளம் மிக்கதாகும். இந்தி யாவிலேயே மிக அதிகமாக மழை பெய்யும் சிரபுஞ்சி இம்மாநிலத்தில் தான் உள்ளது. வங்காளத்தையும் , மற்ற மூன்று திசைகளில் அஸ்ஸா - 207 அஸ்ஸாமிலிருந்து 1970ஆம் ஆண்டு பிரிந்து தனி மாநிலமாகியும் அஸ்ஸாம் ஆளுநரின் கீழேயே இயங்கி வருகிறது. ஷில்லாங் இம் மாநிலத்தின் தலைநகர் ஆகும். மேற்கு வங்காளம்: இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது மேற்கு வங்காள மாநிலம். வடக்கே சிக்கிம், கிழக்கே வங்காள தேசம், மேற்கே பீகார், தெற்கே வங்காள விரிகுடாவையும் எல்லைகளாகக் கொண்டது இம்மாநிலம். சுமார் ஐந்த ரைக் கோடி மக்களையும் 87, 850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது இம் மாநிலம். மேற்கு வங்காளம் மாநிலம் இம்மாநிலத்தின் வழியே ஒடும் கங்கையாறு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இந்நதிகள் மூலம் ஏரள்ள