பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y rur s$r சர். சி. வி, பரிசான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர். இவர் பெரும் செல்வ வளம் மிகுந்த குடும்பத்தில் பதினான்காவது பிள் ளையாகக் கல்கத்தாவில் பிறந்தார். சிறு வயது முதலே சமஸ்கிருதமும், ஆங்கிலமும் பயின்றார். இவர் தமது ஏழாம் வயதிலேயே கவிதை இயற்ற லானார். லண்டனுக்கு இருமுறை சென்று கல்வி கற்றார். இவர் பல முறை ஐரோப்பா, அமெரிக்கா, கிழக்கு நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இவர் இந்தியர்களுக்கென புது முறை கல்வி நிலையத்தை உருவாக்க விரும்பினார். அதற்காக 蠶 எனுமிடத்தில் சாந்திநிகேதன் எனும் கல்வி புகட்டும் ஆசிரமத்தை நிறுவினார். நாளடைவில் இது ‘விசு வபாரதி பல்கலைக் கழகமாக வளர்ந் தோங்கியுள்ளது. இலக்கியத்தின் பல்வேறு பிரிவு களிலும் நிறை புலமையும் திறனும் வாய்க்கப் பெற்றவர். கவிதை, கதை, நாடகம், கட்டுரை, அரசியல், தத்து வம் எனப் பலப்பல துறைகளில் நூல் களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “கீதாஞ்சலி எனும் நூலுக்கு 1918 -ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங் கப்பட்டது. அப்பரிசுத் தொகையை அப்போதே தனது 'சாந்திநிகேதன்’ கல்வி நிலையத்துக்கு வழங்கிவிட் டார். t இவர் மீது அண்ணல் காந்தியடி கள் பெருமதிப்புக் கொண்டிருந்தார். தம் கவிதைகள் மூலமும் இலக்கியப் படைப்புகள் மூலமும் தாகூர் விடு தலை வேட்கையை ஏற்படுத்தினார். விடுதலைப் போராட்டத்திலும் தீவி ரப் பங்கு கொண்டார். 209, அண்ணல் காந்தியடிகளை முதன் முதலில் மகாத்மா என்று அழைத்த பெருமை இவருக்கே உண்டு.அதுவே பின்னர் நிலை பெற்று விட்டது. ராமன் சர். சி. வி.: நோபல் பரிசு பெற்ற இரண்டாவது இந்தியர் சர்.சி.வி. ராமன் ஆவர். இயற்பிய جيمس: ఆ அ.ர்.சி வி. ராமன் லில் இவர் கண்டறிந்த விஞ்ஞான உண்மைக்காக இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இவர் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாங்குடி எனும் ஊரில் 1888ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது முழுப்பெயர் வெங்கட்ராமன் என்பதாகும். கல்வியில் இளமையிலேயே பேரார் வம் கொண்ட இவர், தமது பதினா றாம் வயதிலேயே இயற்பியலில் முதன்மைப் பட்டம் பெற்றார். கல் கத்தா, ரங்கூன், நாகபுரி போன்ற இடங்களில் அரசுப் பணியாற்றினார்.