பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கடல் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகும். இது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள் ளது. இது மிகப் பெரும் கடலாக இருப்பதனால்தான் நீண்ட காலம் அமெரிக்காக் கண்டம் இருப்பது ஐரோப்பியர்களுக்கோ மற்றவர் களுக்கோ தெரியாமல் இருந்தது. வடக்கே ஆர்க்டிக் கடலும் தெற்கே அண்டார்க்டிக் கடலும் அமைந்துள் ளன. இவற்றிற்கிடையே உள்ள தூரம் 14,400 கி. மீ. ஆகும். இப் பெருங்கடலின் பரப்பு 82,400,000 ச.கி.மீ. ஆகும். இதன் சராசரி ஆழம் 3,660 LE. அட்லாண் டிக் பெருங்கடல் இப்பெருங்கடலில் பிரிட்டீஸ் தீவு கள், ஐஸ்லாந்து, கீரின்லாந்து, நியூ பவுண்ட்லாந்து, மேற்கிந்தியத் தீவு கள் உள்ளன. உலகின் மிக முக்கிய 11 மீன்பிடி த ள ங் க ள் இப்பெருங்கடலில் அமைந்துள்ளன. பல்வேறு நீரோட் டங்கள் இப்பெருங்கடலில் கலப்ப தால் ஊட்டச் சத்து மிகுகிறது. இத னால்மீன்வளமும்அதிகரிக்கிறது.நியூ பவுண்ட்லாந்க கிட்டுப் பகுதியில் அடிநாச் சதை மிக உச்ச அளவாக மீன் கிடைக் கிறது. உலகின் மொத்த மீன் வளத் தில் 86.5 விழுக்காடு இப்பெருங்கட லிலிருந்து பெறப்படுகிறது. அட்லாண்டிக் பெருங்கடலின் அடி மட்டத்திலிருந்து மிகப்பெரும் மலைத் தொடர் நீண்டு செல்கிறது. இம் மலைத் தொடரின் முகட்டுப் பகுதி கள் தீவுகளாக அமைந்துள்ளன. சாலஞ்சர் விண்வெளிப் பயண ஆய்வின்போது இப்பெருங்கடல் படு கைகளில் மங்கனிஸ், வெள்ளியம் போன்றவைகள் பெருமளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இப்பெருங்கடலில் மிகப் பெருமள வில் கப்பல் போக்குவரத்து நடை பெற்று வருகிறது. இப்பெருங்கடலை முதன் முதலாகக் கப்பல் மூலம் கடந்து அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ் ஆவார். அடிநாச் சதை: "டான்சில்' எனும் அடிநாச் சதை தொண்டையில் உண வுக் குழலுக்கு இருபுறமும் அமைந் துள்ளது. இதை 'உள்நாக்கு' என்று கூறுவதும் உண்டு. இது தசையால் ஆனது. இவை ஒருவகை வெள்ளை இரத்த அணுவை வெளியாக்குகின் றன. இவை நமது வாயின் உட்புறத் தில் இருப்பதால் மூச்சுக் குழலையும் உணவுக் குழலையும் வாயில் உள்ள பிற பொந்துகளையும் கிருமிகளிட மிருந்து காப்பதற்கானவை என எண் ணப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் இந்த உறுப்புகள் அழற்சி அடையும். அதன் மூலம் இவை நுண்கிருமிகள் வாழும் இடங்களாக மாறி விடுகின்றன. இத னால் இதயம், சிறு நீரகம் போன்ற உறுப்புகள் பாதிப்புக்கு ஆளாகின் றன. இவ்வழற்சியைப் போக்க