பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.லால்பகதூர் சாஸ்திரி நதியில் எப்போதும் கப்பல்கள் சென்று கொண்டிருக்கும். லண்டன் துறைமுகம் உலகின் பெரிய துறை முகங்களில் ஒன்றாகும். இதனால் இந்நகரம் மாபெரும் வணிக மைய மாகவும் விளங்குகிறது. இந்நகரிலி. ருந்து உலகின் எல்லாப் பகுதிகளுக் கும் விமானங்கள் செல்கின்றன. இநீ" நகரிலிருந்து இங்கிலாந்து முழுமைக் கும் ரெயில் பாதையும் சாலைகளும் செல்கின்றன. லண்டன் நகரெங்கும் பாதாள ரயில்கள் செல்கின்றன. தேம்ஸ் நதியின் கரையில் இங்கி லாந்தின் நாடாளுமன்றம் அமைந் துள்ளது. பிரிட்டீஸ் அரச குடும்பம் வாழும் பக்கிங்காம் அரண்மனையும் லண்டன் பல்கலைக் கழகம்,பிரிட்டீஷ் பொருட்காட்சி சாலை, நூல் ஆவ ணக் காப்பகம் மற்றும் லண்டன் விலங்குக் காட்சிச் சாலை முதலியன உலகப் புகழ்பெற்றவைகளாகும். லால்பகதூர் சாஸ்திரி: புகழ்பெற்ற இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி ஆவார். இவர் விடுதலைப் போராட்டங்களில் மிகப்பெரும் பங்கு வகித்த பெரும் தலைவருமாவார். இவர் 1904ஆம் ஆண்டு அக்டோ பர் 2ஆம் நாளன்று உத்திரப் பிர பிரதேசத்திலுள்ள காசிக்கு அருகில் மொகல்சரா எனும் ஊரில் பிறந் தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவர் தன் தாய்மாமன் பொறுப்பில் வளர்ந்தார். இவர் காசிப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி கற்றார். இவர் பெற்ற ‘சாஸ்திரி கல்விப் பட்டமே இவரது பெயர் போன்று அமைந்துவிட்டது. அண்ணல் காந்தியடிகள் தொடங் கிய ஒத்துழைமையா இயக்கத்தில் தனது 17வது வயதிலேயே ஈடுபட் 811 டார். தொண்டராகத் தொடங்கிய இவரது அரசியல் வாழ்க்கை படிப்படி யாக உயர்ந்தது. 1950ஆம் ஆண் - * * - به معتصم . م - میه லால்பகதூர் சாஸ்திரி டில் அனைத்திந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆனார். பின்னர் 1952 முதல் 1964 வரை மத்திய அமைச்சராகப் பணியாற்றினர். 1964 இல் பிரதமர் நேரு காலமானதைத் தொடர்ந்து சாஸ்திரி பிரதமர் ஆனார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு மிடையே 1965 செப்டம்பரில் போர் மூண்டது.சாஸ்திரி இந்தியப்படையை அனுப்பி பாகிஸ்தான் படையை வெற்றி கொள்ளச் செய்தார். ரஷியா வின் மத்தியஸ்தத்தில் பாகிஸ்தா னுடன் சமரசம் பேச ரஷியாவில் உள்ள தாஷ்கெண்ட் நகர் சென்று சமரசக் கூட்டத்தில் கலந்து கொண் டார். சமாதான ஒப்பந்தம் கையெழுத் தான சிலமணி நேரங்களுக்குள் மாரடைப்பால் உயிர் துறந்தார்.