பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொடர்ந்து பரவி நிலைபெற்றது. அவர் இந்தியா திரும்பி, மீண்டும் அமெரிக்கா, ஐரோப்பாவில் இரண் டாவது முறையாகப் பயணம் செய்து அரிய சமய, தத்துவச் சொற்பொழிவு கள் நிகழ்த்தினார். பின், இந்தியா திரும்பி 1897ஆம் ஆண்டில் இராமகிருஷ்ணர் பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கினார். அடுத்த ஆண்டில் கல்கத்தாவை அடுத்த பேளூர் எனுமிடத்தில் இராம கிருஷ்ண மடத்தை ஏற்படுத்தினார். ஆழ்நிலைத் தியானத்தின் மூலம் மாபெரும் ஞானியாக, தத்துவ வித்த கராக, ஆற்றல் மிகு சொற்பொழிவா ளராக சமுதாயத்தைத் தட்டி எழுப்பி விழிப்புணர்வு ஊட்டிய விடிவெள்ளி யாக 80 ஆண்டுகள் வாழ்ந்து மறைந் தார். அவரது எழுத்தும் பேச்சும் பல்வேறு நூல்களாக வெளிவந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டி வரு கின்றன. கன்னியாகுமரியில் முன்பு அவர் தியானம் செய்த பாறையின் மீது கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவுச் சின்னம் இன்று அவரது நினைவை உலகுக்கு நினைவூட்டும் அரிய சின்னமாக விளங்கி வருகிறது. வைட்டமின்: உடலுக்கு வேண்டிய இன்றியமையாத ஊட்டச்சத்துக் களை வழங்கக்கூடிய உயிர்ச்சத்துக் களே வைட்டமின்' என்று அழைக் கப்படுகின்றன.வைட்டமின் என்ப தற்கு உயிர்க்குத் தேவையான உள்ட்டப்பொருள்' என்பது பொருளா கும். உடலுக்கு இன்றியமையாத இச் சத்துப் பொருளை முதன் முதலாகக் கண்டறிந்தவர் ஹாப்கின்ஸ் எனும் 217 ஆங்கில விஞ்ஞானி ஆவார். இவர் இதை 1912இல் கண்டறிந்தார். அதே ஆண்டில் கசுபிர் எனும் போலந்து விஞ்ஞானி வைட்டமின் எனும் தனிப்பொருளைக் கண்டுபிடித் தார். தொடர் ஆராய்ச்சியின் விளை வாக இதுவரை 80-க்கு மேற்பட்ட வைட்டமின் வகைகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றுள் 14 வகை களைத் தனியே பிரித்துக் கண்டு பிடித்துள்ளனர். அவற்றிற்குABCDEK என ஆங்கில எழுத்து முறையில் பெயரிட்டுள்ளனர். வைட்டமின்களை இருவகையாகப் பிரிப்பர். ஒன்று கொழுப்பில் கரை பவை. இவை A,D,E,K வைட்டமின் கள். மற்றொன்று நீரில் கரைபவை. இவை BC வைட்டமின்களாகும். எல்லா வைட்டமின்களையும் உணவு வகைகள் மூலமே நாம் பெற முடியும். அவ்வாறு பெற இயலாத போது வைட்டமின்களை மாத்திரை களாகவும் மருந்தாகவும் உட் கொண்டு பெறலாம். ஜப்பான்: ஆசியாக் கண்டத்தில் உள்ள தொழில்வளம் மிகுந்த நாடு நாடு ஜப்பான் ஆகும். இந்நாடு ஒரே நிலப்பரப்பாக இல்லாது தீவுக்கூட் டங்களின் தொகுதியாக உள்ளது கியூஹி, ஹிக்காக்கூ, ஹன்ஷ9, ஹாக்கைடே ஆகிய நான்கு பெருந் தீவுகளும் பல சிறு தீவுகளும் இணைந்து ஒரு நாடாக அமைந்துள் ளது. இதன் கிழக்கே பசிபிக்கடலும் மேற்கே ஜப்பான் கடலும் உள்ளன. 3, 7 , 118 சதுர கிலோ மீட்டர் பரப் பளவு உள்ள இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 12 கோடியா கும். டோக்கியோ ஜப்பானின் தலை நகரம் ஆகும். ஜப்பான் நாடு மலைகள் நிறைந்த தாகும். இந்நாட்டின் மிக உயர்ந்த