பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அணிகள் மனிதன் என்றைக்கு அழகை விரும்பத் தொடங்கினானோ அன்றைக்கே அணிகலன்களையும் அணிந்து தன்னை அழகுபடுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டான் என லாம். அணிகலன்களை விரும்பாத மனிதர்களே உலகில் இல்லை என லாம். தொடக்க காலத்தில் வழவழப் பாக்கப்பட்ட கல்லால் ஆன அணி கலன்களை அணிந்தனர். பின் இரும் பாலும் வெண்கலத்தாலும் செய்யப் பட்ட அணிகலன்களை அணிந்தனர். தங்கமும் வெள்ளியும் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு அவற்றில் நகை செய்து அணியலாயினர். செல்வவளம் மிக்க வர்கள் நவமணிகளால் நகைகள் செய்து அணிந்து மகிழ்ந்தனர். சங் கால் ஆன நகைகளை நீண்ட நெடுங் காலமாகவே மனிதர்கள் அணியலா யினர். தமிழ் இலக்கியங்களில் பலவகை யான அணிகலன்கள் வர்ணிக்கப்பட் டுள்ளன. அக்காலத் தமிழ்ப் பெண் களும் ஆண்களும் காதிலும் கழுத்தி லும் காலிலும் கையிலும் அணிந்து வந்த நகைகளை இன்று அணிவ தில்லை. காலந்தோறும் நகை வகைகள் மாறி மாறி வந்துள்ளன. நாட்டுக்கு நாடும் அணிகலன்கள் மாறுபடுகின்றன. பழைய இலக்கியங்கள், ஒவியங் கள், சிற்பங்கள் அக்கால அணிகலன் களை விவரிக்கின்றன. மொஹஞ் சதாரோ, ஹரப்பா போன்ற இடங் களில் கண்டறியப்பட்ட சிற்பங்கள் மூலம் அக்கால மக்களின் அணிகலன் களை அறிய முடிகிறது. இன்றும் சேர, சோழ, பாண்டியர், பல்லவர், விஜய நகர மன்னர் கால சிற்பங்கள் மூலம் அக்காலத்தில் அணியப்பட்ட 원), கிறது. இன்று உலகில் வைரம் போன்ற நவமணி நகைகள் உண்டு. இவற்றின் மதிப்புஅதிகமாக உள்ளது. நாகரிக வளர்ச்சியை மட்டுமல்லாது பொருளாதார செழிப்பையும் அணி கலன்கள் புலப்படுத்துகின்றன. அனு: உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் தனித்தனி தனிமங் களால் ஆனவை. இத்தனிமங்களே ஒரு பொருள் உருவாக அடிப்படைக் காரணமாய் அமைகின்றன. இத்தனிமத்தை சிறுசிறு கூறு களாகப் பகுத்துக்கொண்டே செல் லும்போது இறுதியில் பகுக்க முடியாத மிகச் சிறு நுண்பகுதி வரும். இதுவே அணு என்பது. இஃது பகுக்க முடி யாதது மட்டுமல்ல; கண்ணால் பார்க் கவும் முடியாத நுண்பொருளாகும். ஒரு குண்டுசியின் முனையில் பல்லா யிரம் கோடி அணுக்கள் இருக்கின் றன என்றால் அதன் நுண்மையைப் புரிந்துகொள்ளலாம். டெலஸ்கோப் போன்ற மிகப் பெரும் நுண்பெருக் காடியால் கூட அனுவைக் காண முடியாது. அணுவைக் கண்ணால் காண இய லாவிட்டாலும் அணுவின் தன்மையை அதைச் சார்ந்த பொருள்களைக் கொண்டு கணிக்க முடியும் என்பதை டால்டன் எனும் அணு ஆய்வாளர் கண்டறிந்து கூறினார். இவரும் அணுவை மேலும் பகுக்கவோ பிளக் கவோ முடியாது என்றே கருதினார். ஆனால், அவருக்குப் பின்னர் அணு ஆய்வை மேற்கொண்ட தாம் சன், லூதர்ஃபோர்டு, நீல்ஸ் போக் போன்ற அணு அறிவியலாளர்கள் அணுவைப் பிளக்க முடியும் எனக் அணிமணிகளைப் பற்றி அறிய முடி கண்டறிந்து கூறின்ார்கள். அணு