பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நகரமாகும். இங்குள்ள பொற்கோயி லில் சீக்கியர்கள் வேதமான கிரந்த சாஹிப் வைக்கப்பட்டுள்ள்து. அதை மக்கள் வணங்கி வருகிறார்கள். மாபெரும் நீர்த்தடாகம் ஒன்று பொற் கோயிலோடு இணைந்துள்ளது. அத் தடாகத்தின் பெயரான ஆமிர்தசரஸ்' என்பதே அந்நகரின் பேயராகவும் அமைந்துள்ளது. 1919ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தின்போது ஜெனரல் டையர் என்னும் கொடியவன் நூற்றுக் கணக்கான மக்களைச் சுட்டுக் கொன்றான். ஜாலியன் வாலாபாக்' எனும் இடம் இந்நகரில்தான் உள் ளது. இந்நிகழ்ச்சி பஞ்சாப் படு கொலை' என அழைக்கப்படுகிறது. கைத்தறித் தொழிலுக்குப் புகழ் பெற்றது இந்நகரம். தோல் பதனிடல் இங்கு நடைபெறும் மற்றொரு முக்கி யத் தொழிலாகும். அமிலங்கள்: அமிலம் என்பது ஒரு வகைப் புளிப்புப் பொருளாகும். எலு மிச்சைப் பழம், ஆரஞ்சு, ஆப்பிள். திராட்சைப் பழங்களில் இத்தகைய அமிலம் உண்டு. ஆனால், இவற்றில் உள்ள அமிலங்கள் ஒரே வகை யானவை அல்ல. இவை வெவ்வேறு வகையைச் சேர்ந்தவையாகும். இவை காரங்களையும் சிலவகை உலோகங்களையும் கரைக்கக் கூடிய வைகள் ஆகும். எல்லா அமிலங்களுக் கும் சில பொதுத் தன்மைகள் உள் ளன. அமிலங்கள் நீரில் கரையும் போது அவற்றின் தனிக் குணங்கள் வெளிப்படும். அமிலங்கள் ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியன முக்கியமானவைகள் ஆகும். மற்ற அமிலங்களைவிட ஆற்றல் மிக்கவை. அமீப இவை இரும்பு, துத்தநாகம் போன்ற உலோகங்களையே அரித்து விட வல்லவை. நம் உடலில் இவை பட் டால் பட்டவிடம் புண்ணாகிவிடும். பரிசோதனைக் கூடங்களில் அதிக அளவில் அமிலங்கள் பயன்படுத்தப் படுகின்றன. உரங்கள், சாயங்கள் தயாரிக்க அதிக அளவில் அமிலங் கள் பயன்படுகின்றன. நாம் உண்ணும் உணவு செறியா மைக்குத் தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் நம் இறைப்பையி லேயே சுரக்கிறது. அமீபா உயிரினங்களில் மிகச் சிறிய நுண்ணுயிர் அமீபா ஆகும். ஓரணு உயிரினத் தொகுதியைச் ஆ g e - போலித்தால் அமீபா சேர்ந்ததாகும். இதன் உடல் முழு வதும் ஒரே உயிரணுவால் ஆனது.