பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவிந்தர் ஆகும். குடியரசு ஆட்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இந் தியா விளங்குகிறது. அரசு தன் அதிகாரங்களைச் செயல் படுத்த சில வழிமுறைகள் உண்டு. அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்துக் கொண்டு நாடு முழு வதையும் ஆட்சி செய்யும் முறை ஒற்றை ஆட்சி முறையாகும். இங்கி லாந்து நாட்டில் இத்தகைய ஆட்சி முறையே நடை பெறுகிறது. நாட்டில் மைய அரசு ஒன்று அமைந்து, சுயாட்சி, தன்னாட்சி உரிமை பெற்ற மாநில அரசுகளும் தனித்தனியே அமைந்து நடைபெறும் ஆட்சி கூட் டாட்சி ஆகும். இதற்கு எடுத்துக்காட் டாக அமைந்திருப்பது இந்தியக் கூட் டாட்சிமுறையாகும். நாட்டை ஆளும் முக்கியப் பொறுப்பு மைய, மாநில அமைச்சர்களைச் சார் ந் த தா கும். நாட்டை ஆளும் முழுப் பொறுப்பு குடியரசுத் தலைவருக்கு இருந்தால் அது குடியரசுத் தலைவர் ஆட்சியா கும். இதற்கு உதாரணமாக விளங்கு வது அமெரிக்க ஆட்சியாகும். இந்தியாவில் மூன்றடுக்கு ஆட்சி முறை அமைந்துள்ளது. நாடு முழுவ தற்கும் மைய ஆட்சியும், அதற்கு அடுத்த நிலையில், மாநில ஆட்சியும் அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, உள்ளாட்சி எனப் பல படிநிலைகளில் ஆட்சி நடந்து வருகிறது. அரபிக் கடல் இந்திய மாகடலுக்கு வடமேற்கே அரபு நாடுகள் வரை பரந்துள்ளது. இக்கடல் வழியாகவே ஐரோப்பாவுக்கும் இடையே கடல் வாணிகம் நட்ந்து வருகிறது. இந்தியாவிற்கு மேற்கே அமைந்துள்ள இக் கடலில் இந்தியப் பகுதிகளானஇலட்சத் தீவுகள்அமைந் இந்தியாவுக்கும். துள்ளன. ஏடன், கராச்சி, பம்பாய், கொச்சின், கொழும்பு முதலிய துறைமுகங்கள் இக்கடலை நோக்கி அமைந்துள்ளன. # அரவிந்தர்: இருபதாம் நூற்றாண் டில் வாழ்ந்த ஞானிகளில் மிக முக்கிய மானவர் அரவிந்தர். 1872ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இளமையில் இங்கிலாந்தில் கல்வி கற்றார். இந் தியா திரும்பிய பின்னர் வங்க மொழி யிலும் சமஸ்கிருத மொழியிலும் நிறைந்த புலைமை பெற்றார். அரவிந்தர் தம் முப்பத்தைந்தாம் வயதில் கல்கத்தாவின் தேசிய கல்லூரித் தலைவர் ஆனார். வி டு த ைல வேட்கை கொண்ட அரவிந்தர் 'வந்தே மாதரம்' எனும் இதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந்து தேசியக் கட்டுரைகள் எழுதி விடுதலை வேட் கையை தூண்டினார். மேடைகளில்