பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பேசி விடுதலை உணர்வைப் பொங்கி யெழச் செய்தார். இதற்காக இவரை ஆங்கில அரசாங்கம் சிறையிலடைத் đ53y. - ; : சிறையிலிருந்து வெளிவந்த சிறிது காலத்திற்குப் பின்னர் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அப்போது புதுச் சேரி ஃபிரெஞ்சுக்காரர்களின் ஆட் சிக்குட்பட்டிருந்தது. அங்கு ஒரு ஆசிரமத்தைத் தொடங்கி அங்கேயே நிலையாகத் தங்கி தியான வாழ்வைப் பின்பற்றினார். - தியான வாழ்வின் மூலம் தான் பெற்ற ஞான உணர்வைத் தத்துவக் கட்டுரைகளாக எழுதி நூல்வடிவில் வெளியிட்டார். இவரது தத்துவச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் இவ ரைக் காண வந்தனர். 1950 ஆண்டு டிசம்பர் 3ஆம் நாளன்று தம் அர விந்த ஆசிரமத்தில் இறந்தார். இங்கு இவரது சமாதி உள்ளது. அரிக்க மேடு, இது பாண்டிச் சேரிக்கு அருகில் உள்ள அரியாங்குப் பத்து ஆற்றங்கரையில் பாழடைந்து கிடக்கும் மேடு. இந்த இடம் ஒரு காலத்தில் மிகப் பெரிய துறைமுகப் பட்டினமாக இருந்தது. அப்போது அங்கிருந்து வணிகக் கப்பல்கள் உல கின் பல்வேறு பகுதிகளுக்கும் சென் றன. அவ்வாறே ரோம் போன்ற மேலை நாடுகளிலிருந்தும் அங்கு வந்தன. அப்போது அதன் பெயர் "பொதுகைப் பட்டினம் என வழங்கி யது. காலப்போக்கில் அழிந்து இன்று வெறும் மண்மேடாக அரிக்கமேடு என்ற பெயரில் உள்ளது. சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு இப்பகுதியைத் தொல்பொருள் ஆய் வாளர்கள் தோண்டி ஆராய்ந்தனர். அப்போது, பளிங்கு, கண்ணாடி, அரிச்சந்திரன் பவளம் போன்றவற்றால் செய்யப் பட்ட அணிமணிகளும், சுட்ட செங் கற்களால் கட்டப்பட்ட பண்டக சாலைகளும், கண்டறியப்பட்டன. உருவங்கள் பொறிக்கப்பட்ட பதக் கங்களும் சங்கு வளையல்களும் கிடைத்துள்ளன. ரோம் போன்ற வெளிநாட்டைச் சேர்ந்த மதுக்காடி கள்,கண்ணாடிக் கோப்பைகள், மண் ணால் செய்யப்பட்ட பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவைகளால் இப் பகுதி மற்ற உலக நாடுகளோடு கொண்டிருந்த தொடர்பு தெளிவா கிறது. அத்துடன் இந்நகரம் மிகுந்த செல்வச் செழிப்புடன் விளங்கியதாக வும் கருதப்படுகிறது. அரிச்சந்திரன்: பொய் பே சக் கூடாது என்பதற்கு இணையற்ற எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டிய மன்னன் அயோத்தியை ஆண்டு வந்தான். வசிட்டர் என்பவரும் விசுவாமித்திரர் என்பவரும் பெரும் முனிவர்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட போட்டியால் விசுவாமித் திரர் அரிச்ச ந்திரனைப்பொய்யனாக்க பெருமுயற்சி மேற்கெண்டார். தான் வேள்வி செய்ய பொருளுதவி கேட்டார் விசுவாமித்திரர். அரிச்சந் திரன் அன்போடு பொருள் தந்தான். மன்னன் தந்த பொருளை அவனி டமே அடைக்கலமாக விசுவாமித்திரர் தந்து சென்றார். கொஞ்ச காலத் திற்குப்பிறகு அவன் நாட்டையேதான மாக விசுவாமித்திரர் கேட்டுப் பெற் றார். இவனிடம் முன்பு அடைக்கலமா கக் கொடுத்துச் சென்ற பொருள் நாட் டுப் பொருளோடு சேர்ந்துவிட்டதால், அப்பொருளை வேறு எங்காவது பெற் றுத் தரவேண்டும் எனக் கூறினார். தர இயலவில்லை யெனில், தான் வாங்கிய பொருளை இல்லை என்று கூறிவிடுமாறு வற்புறுத்தினார். பொய்