பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருவி சொல்ல விரும்பாத அரிச்சந்திரன் அதற்கு மறுத்து, தன் மனைவி மக் களை விற்கிறான். விசுவாமித்திரர் சூழ்ச்சியால் அவன்மகன் லோகி தாசன் பாம்பு கடித்து இறக்கிறான். காசி மன்னனின் மகனைக் கொன்ற தாக அவன் மனைவி சந்திரமதி மீது பழி சுமத்தப்படுகிறது. அரிச்சந்திரன் எதற்கும் கலங்கவில்லை. அரிச்சந்தி ரனை.அடிமையாகப் பெற்ற வீரபாகு வின் ஆணைப்படி தன் மனைவியை வெட்டவும் முனைகிறான். அந்த நிலையிலும் அவன் பொய் பேச மறுத் ಖನ್ದಿಲ್ಡಿ; மனைவியை வெட்ட ஓங்கிய வாள் இறையருளால் மாலையாக மாறி அவன் மனைவி கழுத்தில் விழுந்தது. எந்தத் துன்பத் திலும் பொய் பேச மறுத்துவிட்ட அரிச்சந்திரனின் வாய்மையை அனை வரும் பாராட்டினர். இறையருளால் அவன் மனைவியும் மகனும் உயிர் பெற்றனர். மீண்டும் நாட்டைப் பெற் றான். இதன் மூலம் வாய்மை வாழ்வு தரும்’ எனும் பழமொழி பிறந்தது. அரிஸ்டாட்டில்: (கி.மு. 384 - கி.மு. - 322) கிரேக்க நாட்டின் மாபெரும் தத்துவஞானி. ஏதென்சில் வாழ்ந்த மாபெரும் கிரேக்க அறிஞரும் சிந்தனையாளருமான பிளேட்டோ வின் மாணவர். அரிஸ்டாட்டில் இளமையிலே கூர்த்த சிந்தனையும் ஆராய்ச்சி நுண்ணறிவும் வாய்க்கப் பெற்றவராக இருந்தார். இவர் எழு திய அறிவியல் ஆராய்ச்சி உண்மை களும் தத்துவக் கட்டுரைகளும் மக்க ளிடையே மிகுந்த செல்வாக்கையும். புகழையும் இவருக்குத் தேடித் தந்தன. இவரது அறிவாற்றலைக் கண்டு வியந்த மாசிடோனிய நாட்டு மன்னர் தன் மகனுக்கும் கல்விகற்பிக்கும் ஆசி ரியராக இவரை நியமித்தார். அந்த 85 இளவரசர்தான் உலகப் புகழ்பெற்ற மாவீரர் அலெக்சாந்தர், அரிஸ்டாட்டில் சிலகாலத்துக்குப் பின் மீண்டும் ஏதென்ஸ் திரும் பினார். அங்கு ஒரு க ல் வி ச் சாலையை நிறுவி தன் தத்துவக் க ரு த் துகளைப் போதித்தார்.இவ ரது விஞ்ஞான, அரசியல், தத்து வக் கருத்துகளை பிற் காலத்தில் ஐ ரோ ப் பி ய அறிவு வளர்ச்சிக் கும் நாகரிக வளர்ச்சிக்கும் அடித் தளமாயின. இவர் 62 வயது வரை வாழ்ந்தார், அருவி திரண்டு வரும் மழை நீர் தரையில் ஆறாக ஒடுகிறது. உயர்ந்த அரிஸ்டாட்டில் பாறை நில ப் பகுதிகளிலிருந்து தாழ்ந்த பகுதியை நோக்கிப் பாயும் போது அருவியாகக் கொட்டு கிறது. நீர் பாயும் உயரத்தைப் பொருத்து வேகம் அமையும். மிக உயரத்திலிருந்து வெள்ளமாக நீர்" பாய்ந்தால் அது பேரருவி என்று அழைக்கப்படும். மிகக் குறைந்த உயரத்தில் குறைவான நீர் குதித்துக் குதித்து ஓடினால் அதை சிற்றருவி" என்று கூறுவார்கள். அருவி நீர் கொட்டுமிடத்தில் மடு ஏற்படும். இது நீர்ப்பாசன அரிப்பால் உண்டாகும் பள்ளம். உலகிலேயே மிகப்பெரும் பேரருவிகள் நயாகராவும் விக்டோரியாவும் ஆகும். இந்தியா வில் பேரருவிகளும் சிற்றருவிகளும்