பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றுள் புகழ்பெற்ற மலைத் தொடர் இமயமலைத் தொடராகும். இது இந் தியாவின் வடக்கு எல்லையாகவும் அமைந்துள்ளது. உலகின் மிக உயர மான எவரெஸ்ட் மலை உச்சி இமய மலையில்தான் உள்ளது. அதன் உயரம் 29,028 அடியாகும். கங்கை நதி இமயமலையிலிருந்துதான் உற் பத்தியாகிறது. ஆசியாக் கண்டத்தில் ஒபு, லேனா, ஹவாஸ், ஹோயாங், சிட்சிகியாங், டைகரீஸ், யூப்ரட்டிஸ், ஆமூர், பிரம்மபுத்திரா, கங்கை, சிந்து, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி முதலிய புகழ்பெற்ற ஆறு கள் ஓடி வள மூட்டுகின்றன. எல்லாவிதமான தட்பவெப்ப நிலை களும் இக்கண்டத்தில் உள்ளன. மலைகளை அடுத்து மாபெரும் பீட பூமிகள் அமைந்துள்ளன. பெரும் ஆற்றுப் பகுதியொட்டி சமவெளிகள் உள்ளன. மத்திய ஆசியா, அரேபியா இந்தியாவின் வட பகுதிகளில் பெரும் பாலைவனங்கள் அமைந்துள்ளன. ஆசியாவின் வட பகுதியில் எப் போதும் பனி உறைந்து காணப்படு கிறது. அதே சமயம் அரேபியப் பாலைவனப் பகுதியில் கடுமையான வெப்பம் காணப்படுகிறது. உலகிலே யே மிக அதிகமாக மழை பெய்யும் "சிரபுஞ்சி' எனும் இடம் இந்தியாவில் உள்ளது. உலகின் புகழ்பெற்ற நாக ரிகங்கள் தோன்றி வளர்ந்த பகுதியும் முதலில் மனிதன் தோன்றிய பகுதி யும் ஆசியா கண்டமேயாகும். உலக மக்களில் பாதிக்கு மேல் ஆசியாவில் வாழ்கின்றனர். ஆடைகள்: ம னிதர் க ளு க் கு அழகையும் உடல் பாதுகாப்பையும் தருவன ஆடைகளேயாகும். 'ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்' என் பது பழமொழி. நாகரிகம் வளராத மிகப் பழங்காலத்தில் மனிதர்கள் ஆதிக குடிகன விலங்குகளின் தோல்களை ஆடை யாக அணிந்தனர். பறவைகளின் சிறகுகளையும் இலை தழைகளையும் உடையாக அணிந்தனர். நாளடை வில் நாகரிகம் வளர வளர மனிதர்கள் உரோமம், பருத்தி, பட்டுகளால் ஆடை நெய்து விதவிதமாக அணிய லாயினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பாம்புத் தோல் போன்ற ஆடைகளும் ஆவி போன்ற மெல்லிய ஆடைகளும் நெய்யப்பட்ட தாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இடத்துக்குஇடம் தட்ப வெப்ப மாறு பாடுகள் உண்டு. அதைப் போலவே ஆடைகளும் இடத்துக்கு இடம் வேறு படுகின்றன. குளிர் மிகுந்த பனிப் பிர தேசத்தில் வாழும் எஸ்கிமோ போன்ற வர்கள் தடித்த உரோமம் அடர்ந்த தோல் ஆடைகளை உடுத்துகின் றனர். வெப்பம் மிகுந்த பாலைவனப் பகுதிகளில் வாழ்பவர்கள் மெல்லிய நூலாடைகளை அணி கி ன் ற, ன ர். “இன்று செயற்கையான நூல் இழை களைக் கொண்டு டெரிலின்"போன்ற ஆடைகள் உருவாக்கப்படுகின்றன, ஆதிக் குடிகள்: அறிவு வளர்ச்சி யும் நாகரிகமும் மிகக் குறைவாக இருந்த பழங்காலத்தில் மனிதர்கள் விலங்கைவிட மேம்பட்டவர்களாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் விலங்கு களை வேட்டையாடி, நிழல் கண்ட இடத்தில் உறங்கி, நீர் கண்ட இடத் தில் குடித்து வாழ்ந்து வந்தார்கள். வேட்டையாடிய வி லங்கு க ளின் தோல் க ைள யும் தழைகளையும் ஆடையாக அணிந்து வந்தனர். இவர் கள் சிறு சிறு குழுமங்களாக காடுகளில் வாழ்ந்து வந்தனர். மற்றவர்களின் தொடர்பில்லாது வாழ்ந்து வந்த இவர் களின் சந்ததியினர் இன்றும் உலகின்