பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலங்கட்டி நூலாகும். இவ்வகையில் இதுவே முதல் நூலாகும். இந்நூலுக்கு விரி வான விளக்கவுரைகள் பிற்காலத்தில் பெருமளவில் எழுதப்பட்டன. அக்கால இந்தியர்களின் வானவி யல் நுட்பக் கருத்துகளைப் பற்றி இந் நூல் விரிவாக விளக்குகிறது. அதே போன்று கணக்கியலிலும் நம் முன் னோர்கள் பெற்றிருந்த அறிவு நுட்பங் களை இந்நூல் விவரிக்கிறது. குறிக்கணக்கியல் (Algebra), நிலக் கணக்கியல் (Geometry)பற்றிய புதிய கண்டுபிடிப்புகளையும் இந்நூல் சிறப் பாக எடுத்து விளக்குகிறது. இந்தியா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் ஏவிய முதல் செயற்கைக் கோளுக்கு, வானவியல் வளர்ச்சிக்கு வழிகோலிய ஆரியபட் 'ஆரியபட்டா டரின் நினைவாக என்று பெயரிடப்பட்டது. ரஷ்யா முதலிய எட்டு நாடுகளின் துணையோடு இந்தத் திட்டம் நிறை வேற்றப்பட்டது. இச் செயற் கை க் கோளை உருவாக்க ஐந்து கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டது. 250 பொறியாளர்கள் 26 மாதங்கள் கடு மையாக உழைத்து 'ஆரியபட்டா' செயற்கைக்கோளை உருவாக்கினர். 695 கி. மீ. உயரத்தில் பறக்கவிடப் பட்டது. ஒரு முறை உலகைச் சுற்றி வர 96, 6. நிமிடங்களாகியது. ஒரு நாளைக்கு 15 சுற்றுகள் சுற்றும். இச் செயற்கைக்கோள் மணிக்கு 28,800 கி. மீ. வேகத்தில் சுற்றி வந்தது. ஆல்ப்ஸ்: ஐரோப்பாக் கண்டத் தின் மத்தியிலுள்ள மிகப் பெரிய மலைத் தொடர். மிக உயர்ந்த பணி மூடிய மலையுச்சியை உடையது. அமைதி நிறைந்த அழகிய பள்ளத் தாக்குகளைக் கொண்டது. இதன் 55 நீளம் 1200 கி.மீ. இதில் நூற்றுக் கணக்கான மலைச் சிகரங்கள் உள் ளன. அவற்றுள் மிக உயரமானது பிளாங்க் எனும் மலையுச்சியாகும். வெள்ளை மலை என்பது பொருளா கும். அதன் உயரம் 4807மீ. ஆகும். இது இமயமலையிலுள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்ததாகும். இம் மலைத் தொடர் இத்தாலி, சுவிட்சர் லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ் திரியா, யுகோஸ்லாவியா ஆகிய நாடு களில் பரவியுள்ளது. இயற்கை எழில் நிறைந்த இம்மலை யுச்சிகளிடையே உள்ள கணவாய் களில் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள் பலவுண்டு. இத்தாலி மீது படையெடுத்த வேற்று நாட்டவர்கள் இச்சாலையின் வழியாகத்தான் வந்த னர். இங்கு ஏரிகள் பல உண்டு. "ரைன், ரோன், டான்யூப், போ ஆகிய ஆறுகள் பல இம்மலையில் உற்பத்தி யாகின்றன. இதில் உள்ள மிகப் பெரிய கண வாய் இஸ்டெல்லியோ' என்பதாகும். இதன் நீளம் 2,757e, உலகிலேயே மிக நீளமான சுரங்க இருப்புப் பாதை "சிம்பலான் கணவாய் வழியாகச் செல்கிறது. இதன் நீளம் 20 கி.மீ. இது இத்தாலியையும் சுவிட்சர்லாந் தையும் இணைக்கிறது. எப்போதும் பனி உறைந்துகிடக்கும் இம்மலை பனிச்சறுக்கு விளையாட் டுக்கு ஏற்றதாகும். இது உலகிலுள்ள மிகசிறந்த சுகவாழ்வு மையமாக இருப் பதால் பல்வேறு நாட்டு மக்கள் இங்கே வந்து தங்கிச் செல்கின்றனர். ஆலங்கட்டி: சிலசமயம் இடி மழை பெய்யும்போது சிறிதும் பெரிதுமாக 'ஐஸ்கட்டி வடிவத்தில் ஆகாயத்தி லிருந்து விழும் கடினமான இப்பனிக் கட்டிகளே ஆலங்கட்டி’ Gf6 gf