பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய மொழிகள் பான்மை குறைந்துவிட்டால் அமைச் சரவை பதவி விலகிவிடும். நாட்டின் பாதுகாப்பு, தபால்தந்தி இருப்புப்பாதை, கப்பல், விமான போக்குவரத்து போன்ற முக்கிய துறைகள் அமைச்சரவையால் நிருவ கிக்கப்படும். உச்ச நீதிமன்றம்: மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளையும் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களையும் அரசும் தனிப்பட்டவர்களுக்குமிடை யே ஏற்படும் பூசல்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங் கும். மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றத் தீர்ப்புகளில் மேல் முறையீடு களையும் உச்ச நீதிமன்றம் விசாரித் துத் தீர்ப்பு வழங்கும். நாடாளும் மன் றம் நிறைவேற்றும் சட்டங்கள் முறை யானதாகவும் செல்லத்தக்கவைகளா கவும் உள்ளனவா என்பதைப் பற்றி முடிவு கூறும் பொறுப்பும் உச்ச நீதி மன்றத்திற்கு உண்டு. தலைமை நீதி பதி ஒருவரும் அவரின் கீழ் நீதிபதி கள் பலரும் செயல்படுவர். மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு பறிக்காவண்ணம்காக்கும் கடப் பாடும் உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. மாநில அரசுகள்: இந்திய அரச மைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றி லும் நாடாளுமன்ற அமைச்சரவை போன்றே மாநில அமைச்சரவையின் தலைவர் முதலமைச்சர் என அழைக் கப்படுவார். இவர் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுவார். இவர் பெயராலே யே மாநில ஆட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உயர் நீதிமன்றம் ஒன்று இருக்கும். மத்திய அரசுச் சட்டங்களுக்கு முரண்படாத 71 வகையில் மாநில சட்டப் பேரவைகள் சட்டம் இயற்றும். மாநில அரசுத் தலைவரான ஆளுநர் அச்சட்டங் களைத் தன் பரிந்துரையுடன் குடியர சுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவார். கல்வி, சுகாதாரம், சாலைப் போக்கு வரத்து, மின்சாரம், காவல் போன்ற துறைகள் மாநில அரசாங்கப் பொறுப் பில் உள்ளவைகளாகும். இந்தியப் பெருங்கடல்: உல கில் உள்ள பெருங்கடல்களில் மூன்றாவ தாகும். உலகப் பெருங்கடல்களில் ஒரு நாட்டின் பெயரோடு விளங்கும் ஒரே பெருங்கடல் இந்தியப் பெருங் கடலே ஆகும். இது வடக்கே இந்தியாவையும் தெற்கே அண்டார்ட்டிக்காவையும் கிழக்கே ஆப்பிரிக்காவையும் எல்லை களாகக் கொண்டு விரிந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பரப்பில் இலங்கை, மலகாசி முதலிய பெரிய தீவுகள் அமைந்துள்ளன. பலநூறு சிறிய தீவுகளும் இப்பெருங்கடல் பரப்பில் உள்ளன. இந்தியப் பெருங் கடல் 7,84,42,000 ச. கி. மீ. பரப் பளவு உள்ளது. இதன் சராசரி ஆழம் 3,897மீ. ஆகும். மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் இப்பெருங்கடல் வழி யாகவே காலங்காலமாக வாணிகம் நடந்து வருகிறது. இந்திய மொழிகள்: உலகில் மிக அதிகமான மொழிகளைப் பேசும் மக் களைக் கொண்ட நாடு இந்தியா வாகும். ஐயாயிரம் பேருக்கு மேல் பேசும் மொழிகள் 50 ஆகும். இருப் பினும் இலக்கியச் செழுமையும் மொழி வ ள மும் பெருந்தொகையினரால்