பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S8 ஆராய்ச்சியே செய்து வந்தார். அதைப் பற்றிக் கட்டுரைகள் எழுத லானார். இவரது கணக்கியல் புலமை கண்டு அறிவுலகம் வியந்தது. சென் னைப் பல்கலைக்கழகம் இவரது கணக்கு ஆராய்ச்சிக்கு உதவியது. இராமானுஜத்தின் கணக்குப் புலமை கண்டு வியந்த கணிதப் பேராசிரியர் ஹார்டி இவரை லண்டனுக்கு வரும் படி அழைத்தார். முதலில் செல்ல மறுத்த போதிலும் 1914இல் லண்டன் சென்றார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது கணக்கியல் ஆராய்ச்சிக்கு பேருக்கம் அளித்தது. இவரது க ணி த ப் புலமையைப் பாராட்டி ராயல் சொசைட்டி இவ்ரைத் தன் உறுப்பினராக்கிக் கொண்டது. இச்சிறப்பைப் பெற்ற முதல் இந்தியர் இவரே. இங்கிலாந்தில் இருந்தபோது இவருக்கு நோய் ஏற்பட்டது. 1919 இல் மீண்டும் இந்தியா திரும்பினார். சில நாட்களில் காலமானார். இவரது நினைவைப் போற்றும் வகையில் இராமானுஜன் கணிதவி யல் ஆய்வு நிலையம் அமைக்கப்பட் டது. இந்நிறுவனம் இன்றும் சென் னைப் பல்கலைக்கழகத்தின் அங்க மாக இயங்கி வருகிறது. இராசகோபாலாச்சாரியார் மூதறி ஞர்"எனப்போற்றப்படும் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் 1878-ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் தர்ம புரி மாவட்டத்தில் உள்ள தொரைப் பள்ளி என்னும் சிற்றுாரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் சக்கரவர்த்தி வேங்கடராயர் என்பதாகும். தாயார் பெயர் சிங்காரம்மா ஆகும். அவர் களுக்கு இவர் மூன்றாவது மகனா வார். - தொரைப்பள்ளியிலும் ஒசூரிலும் பள்ளிக்கல்வியை முடித்த இவர் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந் தார். பட்டம் பெற்ற பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை ኣፈ° ఘై, : ' இரர் சிகோப்ாலாச்சாரி யார் முடித்தார். சேலத்தில், வழக்குரை ஞர் தொழிலை நடத்தியபோது பொதுத் தொண்டில் தன்னை ஈடு படுத்திக் கொள்ளலானார். தேசப்பற்றுமிக்க இவர் தேசீய காங்கிரசில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சுடன் ஈடு படலானார். 1921இல் நடைபெற்ற சத்தியாக்கிரக இயக்கம், ஒத்துழை யாமை இயக்கம் ஆகியவற்றில் முனைப்புடன் ஈடுபட்டார். 1945இல் அன்றைய சென்னை மாகாணத் தேர்தலில் வெற்றிபெற்று தலைமை அமைச்சரானார். இரண்டு ஆண்டுகள் திறம்பட ஆட்சிபுரிந்தார். இரண்டாம் உலகப்போர் மூண்ட போது ஆங்கில அரசின் போக்கை எதிர்த்து பதவி விலகினார். அதன் பின் நடைபெற்ற பல விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு ஐந்து முறை சிறை சென்றார். 1946இல் ஏற்பட்ட இடைக்கால அரசில் அமைச்சரானார். நாடு விடு தலை பெற்ற பின்னர் மேற்கு வங்