பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

அடுத்த நாட்டு இளவரசன், கங்கைக் கரையில் இரவு முகாம் போட்டிருந்தான். மறுநாள் என்ன செய்வது என்று இளவரசனும் பரிவாரங்களும் யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.

அப்பொழுது விளக்குடன் கூடை ஒன்று மிதந்து வருவதைக் கண்டான் இளவரசன். அதை எடுத்து வரும்படி கட்டளையிட்டான்.

கூடை கொண்டு வரப்பட்டது. திறந்ததும் வியாபரியின் மகள் அழுது கொண்டே எழுந்து விவரத்தைக் கூறினாள்.

இளவரசன் அவளைத் தேற்றி, காந்தர்வ மணம் செய்து கொண்டான். மௌனசாமி ஏமாற்றம் அடையாமல் இருக்க அதே கூடியில் கருங்குரங்கு ஒன்றை வைத்து மூடி, விளக்கை ஏற்றி வைத்து, மிதக்கவிட்டனர் இளவரசனின் குழுவினர்.

கரையில் ஆவலோடு காத்திருந்த மௌனசாமி, கூடையைக் கண்டு குதித்து ஓடி, அதை தூக்கிச் சென்று திறந்தான்.

கூடைக்குள் இருந்த கருங்குரங்கு கோபத்துடன் மௌனசாமியைக் கடித்து, சின்னாபின்னமாக்கி விட்டது. அவன் வெளியில் தலைகாட்டவில்லை.

காவிஉடையில் திரிந்து, மூடத்தனமானவர்களை ஏமாற்றுகின்றனர் சிலர்.

3

சமயோசித புத்தியால் தப்பித்தாள்


சித்திராங்கி என்ற இளம்பெண், ஒரு பணக்காரச் செட்டியிடம் வேலைக்கு வந்து சேர்ந்தாள்.

செட்டியின் மனைவி இறந்து பல ஆண்டுகள் ஆயின. குழந்தைகளும் இல்லை, செட்டியிடம் தங்க நகைகள்,