பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வைரநகைகள், பொன், வெள்ளி நாணயங்கள், ஏராளமாக இருந்தன. என்றாலும், செட்டி ஒரு கஞ்சன். தர்மம் என்பதையே அவன் அறியாதவன்.

செட்டியிடம் கணக்கன், தோட்டக்காரன், வண்டிக்காரன், சமையல்காரன் ஆகியோர் வேலைக்கு இருந்தனர்.

பணிப் பெண்ணாக வந்து சேர்ந்த சித்திராங்கி, செட்டியின் குணத்துக்கு ஏற்றவாறும், அவனுடைய குறிப்பு அறிந்தும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாள். அதனால் செட்டியின் நம்பிக்கைக்கு உரியவள் ஆனாள்.

செட்டி தன்னுடைய நகைகள் முதலானவை இருக்கும் இடத்தை சித்திராங்கிக்கு காட்டி வைத்தான்.

‘எவ்வளவு நாட்கள் தான் செட்டியிடம் வேலை செய்து கொண்டிருப்பது? இளமைப்பருவம் கழியும் முன்னே, ஒருவனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்தி, குழந்தைகளைப் பெற்று வாழவேண்டும்’ என்ற ஆசை, அவளுக்கு உண்டாயிற்று.

வியாபாரத் தொடர்பாக, செட்டி வெளியூர் சென்றான்.

அதைப் பயன்படுத்திக் கொண்டு, செட்டி வைத்திருந்த நகைகள், முதலானவற்றை எடுத்து, சிறு மூட்டையாகக் கட்டிக்கொண்டு, சித்திராங்கி வீட்டை விட்டு வெளியேறினாள்.

செட்டி திரும்பி வந்தான். சித்திராங்கியைக் காணவில்லை. நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் காலியாக இருந்தது. செட்டிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

செட்டியின் ஆட்கள் சித்திராங்கியைத் தேடிச் சென்றனர்.

எவரிடமும் அகப்படாமல் இருக்கவேண்டுமே என்று எண்ணி, பயத்துடன் சித்திராங்கி பயணத்தை தொடர்ந்தாள்.