பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

அப்போது தெருப்பாடகன் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்தான்.

சித்திராங்கி ஊரைக் கடந்து, காட்டு வழியே சென்றாள். அப்போதும் அவள் அவளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.

அவனிடமிருந்து தப்புவதற்காக அவள் ஒரு யோசனையுடன் திடீரென்று நின்றாள்.

அவனும் நெருங்கி அவள் அருகில் வந்தான். அவள் அழுது கொண்டே, “ஐயா, என் கணவனின் கொடுமை தாளமுடியாமல், மனம் வெறுத்து, வீட்டைவிட்டு வெளியேறி தான் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு இங்கே வந்து சேர்ந்திருக்கிறேன். ஆனால், தூக்கு மாட்டிக் கொள்ள மரக்கிளையில் கயிறு கட்டத் தெரியவில்லை, நீ அதற்கு உதவி செய்தால் நல்லது” என்று கண்கலங்கியபடி சொன்னாள்.

அவள் அணிந்திருந்த நசுைகளைக் கவர்ந்து செல்லும் எண்ணத்தில் தெருப்பாடகன் இருந்தான். அதனால், அவள் தூக்கில் தொங்கி, செத்துத் தொலைந்தால், நகைகளை எளிதாக எடுத்துக் கொள்ளலாமே என்ற ஆசையில் சரி என்று சொல்லி, மரத்தில் ஏறினான். கயிறைக் கட்டி, மற்றொரு நுனியில் சுருக்கு மூடிச்சுப் போட்டு விட்டான்.

“”ஐயா, எனக்கு எட்டாத உயரத்தில் கருக்கு தொங்குகிறதே! அதிலே எப்படி நான் கழுத்தைக் கொடுப்பது? அரை குறையாகச் செய்து, உயிர் போகாவிட்டால், அவமானப்பட்டு தண்டனைக்கும் அவமானத்துக்கும் ஆளாக நேரிடுமே. ஆகையால், நீ முதலில் செய்து காட்டினால், நான் அப்படியே செய்வேன்” என்றாள் அவள்.

தெருப்பாடகனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. தன்னுடைய மிருதங்கத்தை நிமிர்த்தி வைத்து, அதில் ஏறி நின்று, சுருக்கு