பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

தொழில் கற்று முன்னேறினான்


இரும்பு வியாபாரி ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து கொண்டிருந்தனர்.

வியாபாரிக்கு வயதாகி விட்டது. எனவே, தன்னுடைய சொத்து முழுவதையும் இளைய மகனுக்கே கொடுத்து விட விரும்பினார். ஏன் என்றால், இளைய மகனிடம் மிகுந்த பிரியம் கொண்டிருந்தார்.

அதை அறிந்த வியாபாரியின் மனைவி கணவனிடம், “இருவருமே நம்முடைய பிள்ளைகள்தானே சொத்து இருவருக்கும் பொது அல்லவா? இளையவனுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டால், மூத்தவன் என்ன செய்வான்? இருவருக்கும் சமமாகக் கொடுப்பதே நியாயம்” என்று வாதாடினாள்.

அதற்கு வியாபாரி, “நான் தேடிய சொத்து. என் விருப்பப்படி, இளையவனுக்குக் கொடுக்கவே விரும்புகிறேன். இந்தச் செய்தியை நம் மக்களுக்குத் தெரிவிக்கக் கூடாது” என மனைவியிடம் எச்சரித்தார்.

மனைவி, தன் வேண்டுகோளை கணவன் எற்காததால், மிகவும் வருந்தி அழுது கொண்டிருந்தாள்.

அப்பொழுது, குடும்ப நண்பர் ஒருவர் வந்தார். வியாபாரியின் மனைவியைப் பார்த்து, “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார். கணவனின் எண்ணத்தைக் கூறி வருந்தினார் மனைவி

மேலும், “என்னிடம் தனியாக எதுவுமே இல்லை. இருந்தால், மூத்தவனுக்குக் கொடுக்கலாம். என் துயரத்தைப் போக்க வழி எதுவும் தெரியவில்லை ” என்று புலம்பினாள்.