பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

“அம்மா! நீங்கள் கலங்க வேண்டாம். துன்பம் தீர வழி ஒன்று உண்டு. அதாவது இளையவனுக்கே சொத்து முழுவதும் கிடைக்கப் போகிறது. மூத்தவனுக்கு எதுவும் இல்லை என்பதை இப்பொழுதே அவர்களிடம் தெரிவித்து விடுங்கள் பின்னால் இருவரும் சமமாகி விடக்கூடும்” என்று கூறிச் சென்றார் உறவினர்.

மகன்கள் இருவரிடமும் விவரத்தைக் கூறினாள் தாய்.

இளையவன், சொத்து முழுவதும் தனக்குக் கிடைக்கப் போகிறது. அதில் அண்ணனுக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கர்வமாக இருந்தான். மேலும், தொழிலைக் கவனிக்கவில்லை.

‘சொத்தில் தனக்கு பங்கு இல்லை’ என்று தாய் கூறியதும், மூத்தவன் அப்பொழுதே வீட்டைவிட்டுப் புறப்பட்டு, அயலூர் சென்றான். அங்கே தொழில் பயிற்சி பெற்றான்.

வியாபாரி இறந்து போனார்.

இளையவன், தொழில் முறை தெரியாமல், சொத்து முழுவதையும் இழந்து, உணவுக்கே வழியில்லாமல் திண்டாடலானான். மூத்தவன் தொழில் பயிற்சி பெற்று, பணக்காரன் ஆனான். தாயையும் ஆதரித்தான்.

6

சுண்டெலிகளின் ஏமாற்றம்


ஒரு விவசாயியின் தானியக் களஞ்சியத்தின் அருகில், சுண்டெலி ஒன்று வசித்து வந்தது.

அந்தக் களஞ்சியத்தில் சிறு துவாரம் இருந்தது. அதன் வழியாகச் சிந்தும் தானியங்களைச் சுண்டெலி வயிறு நிறையத் தின்று ககமாகத் திரிந்தது. அது தன்னுடைய சுகத்தை மற்ற