பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/22

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19 8 உணவுக்குப் பயன்படுகிறோம் ஒரு பண்ணையாரிடம் வல்லூறும், சேவலும் இருந்தன. வல்லூறு பண்ணையாரிடம் பழகி அவர் அழைத்தபோதெல்லாம் சென்று, அவருடைய மணிக்கட்டில் உட்கார்ந்து கொள்வது வழக்கம். ஆனால், சேவல் மட்டும் பண்ணையாரை நெருங்குவதில்லை அவர் அருகில் வந்த உடனே, அது கூவிக் கொண்டே ஓடிவிடும். ஒரு நாள் வல்லூறு, சேவலைப் பார்த்து, “உங்களுக்கு நன்றி என்பதே கிடையாது”. என்று கூறியது. மேலும், கோழி இனத்தையே ஏளனமாகப் பேசத் தொடங்கியது. நீங்கள் அடிமைப்புத்தி உள்ளவர்கள். உங்களுக்குப் பசி வந்தால் மட்டும் எசமானரைத் தேடி ஓடுவீர்கள். காட்டுப் பறவைகளாகிய எங்கள் குணமே வேறு. எங்களுக்கு மிகுந்த வலிமை உண்டு. மற்ற பறவைகளைவிட வேகமாக எங்களால் பறந்து செல்ல இயலும் மனிதர்களிடமிருந்து நாங்கள் விலகி ஓடுவதில்லை. எங்களை அழைக்கும் போது, நாங்களாகவே அவர்களிடம் போகிறோம். எங்களுக்கு உணவு அளித்து வளர்ப்பதை நாங்கள் மறப்பதில்லை” என்று கூறியது. அதற்கு சேவல், “நீங்கள் மனிதர்களைக் கண்டு ஓடாமல் இருப்பதற்குக் காரணம். அவர்களுடைய உணவு மேசைகளின் மீது, வேகவைத்த வல்லூறுகளை நீங்கள் பார்த்ததில்லை. ஆனால், நாங்களோ, வேகவைத்த கோழிகளையும், குஞ்சுகளையும் அடிக்கடி பார்கிறோமே!” என்று கூறியது.