பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21 வாழ்கிறேன். அதோடு பெற்ற கடனுக்காக அவனுக்குச் சோறு போடுகிறேன். இப்பொழுது நூறு ரூபாய் அபராதம் செலுத்தினால், மீண்டும், மீண்டும் சூதாடி விடுவான். ஆகையால், மூன்று மாதம் சிறையில் அவன் இருந்தால், புத்தியாவது வரும். எவ்வளவோ பெரிய மனிதர்கள், தேசபக்தர்கள் சிறைக்குப் போகவில்லையா? செயலில் வேறுபாடு இருந்தாலும் சிறைச்சாலை பொதுதானே?” என்று கூறி முடித்தாள் அவன் தாய், அவனைக் கூட்டிக் கொண்டு காவலர் வெளியே சென்றார். தங்கள் திட்டம் தோல்வி அடைந்ததில் இருவருக்கும் ஏமாற்றம் 10 திருட்டில் ஒரு தந்திரம் பட்டணத்திலிருந்து ஒரு வியாபாரி ஒரு சிற்றுாருக்கு வந்தான். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தான். பழைய பொருள்கள் எதுவானாலும் விலைக்கு வாங்கினான். எந்தப் பொருளானாலும் நான்கணா, எட்டணா, ஒரு ரூபாய் அதற்குமேல் வாங்குவதில்லை. இந்தச் செய்தி ஊர் முழுதும் பரவியது. தினமும் மக்கள் வந்து பொருளை விற்று, பணம் வாங்கிச் சென்றனர். வியாபாரிக்கு, வீட்டை வாடகைக்கு விட்டவர், “இந்தப் பொருள்களை வாங்கி நீர் என்ன செய்வீர்?’ என்று கேட்டார். “இந்தப் பொருள்களை லாரியில் ஏற்றி, மலைப்பகுதி, மற்றும் ஆதிவாசிகள் வசிக்கும் இடத்தில் போட்டு விற்பனை செய்வேன். எத்தனையோ வியாபாரத்தில் இது ஒரு விதம்” என்றான் வியாபாரி. பழைய பொருள்களை வாங்கிக் குவித்ததில் வீடு நிறைந்துவிட்டது.