பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22 அந்த ஊரில் இருந்த ஒருவனுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை வியாபாரியின் வீட்டின் பின்புறம் சுவரில் ஏறி, ஏதாவது ஒரு பொருளை எடுத்து, முன்புறம் வந்து வியாபாரியிடம் கொடுத்து எட்டணா அல்லது ஒரு ரூபாய் பெற்றுச் செல்வான். இப்படி பலநாட்கள் ஓடின. அவனுடைய திருட்டுத் தனத்தை ஒருவன் கண்டுபிடித்தான். "நீ செய்யும் திருட்டுவேலை எனக்குத் தெரியும். ஆகையால், எனக்கு அதில் பாதி கொடுத்து விடு” என்று மிரட்டினான் அவன். “என்னுடைய தந்திரத்தால் நான் செய்கிறேன். உன்னால் முடிந்தால், நீ செய்யலாமே? நான் தடையாக இருக்கமாட்டேன்” என்றான் அவன். மறுநாள் வியாபாரியிடம் சென்று அவனுடைய திருட்டுத் தனத்தைக் கூறிவிட்டான். வியாபாரி திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வீட்டுக்குக் காவல் புரிய ஒருவனை ஏற்பாடு செய்தான் வியாபாரி. திருட்டில் பங்கு கொடுத்திருந்தால் அவன் காட்டிக் கொடுத்திருப்பானா? 11 அதை நீயே எடுத்துச் செல் ஒரு சிற்றுாரில் பெரியவர் ஒருவர் இருந்தார். மிகுந்த அனுபவமும் கல்வி அறிவும் பெற்றவர். எவர் வந்து, எந்த நேரத்தில் உதவியோ, யோசனையோ கேட்டாலும் தயங்காமல் இயன்றளவு செய்யக் கூடியவர். அந்த ஊரில் உள்ள போக்கிரிக்கு பெரியவரிடம் வெறுப்பு. அவரைத் திட்டிக் கொண்டே இருப்பான். ஆனால், அவரோ அதைப்