பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/27

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24 “எத்தனை ஆண்டுகளாக இந்த வள்ளி திருமணக் கதையைக் கேட்பது இப்படி புராணக்கதைகளைக் கேட்டு, கேட்டு சலித்து விட்டது. புராணக் கதையை படித்து விட்டோமே. மீண்டும், கண்விழித்து இந்தக் கதையைக் கேட்கவேண்டுமா? என்று முணுமுணுத்துக் கொண்டு எழுந்து சென்றனர். ஒரே ஒருவன் மட்டும் அங்கே உட்கார்ந்திருந்தான். கதை கூறும் பாகவதருக்கு கூட்டம் கலைந்து சென்று விட்டதில் கோபமும் வருத்தமும் மேலிட்டது. என்றாலும், ஒருவன் மட்டும் தனக்கு எதிரில் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு எதிரில் இருந்தவனைப்பார்த்து, இவர் ஒருவர் மட்டுமே பக்தர் என்று எனக்குத் தோன்றுகிறது. இவருக்காகவே நான் இந்தக் கதையைக் கூறுகிறேன்” என்றார் பாகவதர். "ஐயா, பாகவதர் அவர்களே! நான் எழுதப் படிக்கத் தெரியாதவன் தரை விரிப்பையும், பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கோயில் தர்மாகர்த்தா வீட்டுக்குப் போக வேண்டும் அதற்காகவே இங்கே உட்கார்ந்திருக்கிறேன்” என்றார் அந்த ஆள். 13 அண்ணனின் பணத் திமிர் ஒரு ஊரில் அண்ணனும், தம்பியும் அடுத்த அடுத்த வீட்டில் வாழ்ந்து வந்தனர். அண்ணன் வியாபாரம் செய்து பணக்காரன் ஆனான். தம்பியோ உழைத்துச் சம்பாதிக்கும் ஏழ்மை நிலையில் இருந்தான். தம்பிக்கு எதுவுமே உதவுவதில்லை. அவனும் அண்ணனிடம் உதவி கேட்பதில்லை.