பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/28

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25 அண்ணனுக்கு, தான் பணவசதி உள்ளவன் என்ற கர்வம் அதிகம், அதனால் எவரிடமும் அலட்சியமாக நடந்து கொள்வான். ஒரு நாள், தன் தம்பியிடம், “உன் வீட்டை என்னிடம் விற்றுவிட்டு வேறு எங்கேயாவது போய் குடியிருக்கலாமே?” என்றான். தம்பிக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, “உனக்கு பணத்திமிர் அதிகம். அகம்பாவத்தால், ஆட்டம் போடாதே; உன்னிடம் எப்பொழுதாவது நான் உதவி கேட்டது உண்டா? உன் வீட்டு வாசலைக் கூட மிதித்தது இல்லையே, அப்படி இருக்கும்போது, என் வீட்டை விலைக்குக் கேட்கிறாயே, உனக்கு எவ்வளவு கர்வம்? நான் வேண்டுமானால், என் பக்கத்து வீட்டுக்காரர் என் அண்ணன் பெரிய பணக்காரன் என்று பெருமையாகக் கூறிக் கொள்ள முடியும் நான் அப்படி பெருமையாகப் பேச முடியாத போது, நீ ஏன் கர்வத்தோடு இருக்க வேண்டும். ஏனெனில், உன் பக்கத்து வீட்டுக்காரனாகிய உன் தம்பி மிகவும் ஏழையாகிய நான் தானே?” என்று பொரிந்து தள்ளினான். அது முதல் அண்ணனின் அகம்பாவம் மறைந்தது. 14 மோதிரம் அணிந்தவனின் பெருமை ஒரு கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் வேலை தேடி சென்னைக்குச் சென்றான். அங்கே அலைந்து திரிந்து, ஒரு சிற்றுண்டி சாலையில் பரிமாறும் வேலையில் சேர்ந்தான். கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தது. சில மாதங்களில், ஆடம்பரமாக, கிராமத்துக்குத் திரும்பிச் சென்றான்.