பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/29

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26 கிராமத்து இளைஞர்கள் அவனை வரவேற்று அவனுடைய சென்னை வாழ்க்கை,வேலை முதலியவற்றை ஆவலோடு கேட்டனர். அவர்கள் சென்னை நகரத்தை பார்க்காதவர்கள் எல்லோருக்கும் பெருமையாகப் பதில் சொன்னான் அவன். அவர்களில் சிலர் தாங்களும் சென்னைக்குப் போக விரும்பினார்கள். போனதும் எழுதுகிறேன். நீங்கள் வரலாம் என்றான். அவர்களில் வசதியான இளைஞன் ஒருவன், தான் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி சென்னையிலிருந்து வந்திருந்த இளைஞனுக்குப் பரிசு அளித்தான். வந்திருந்த இளைஞன், சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கு இருந்த கிராமத்து இளைஞர்கள், “மழை உண்டா? வேளாண்மை எப்படி?" என்று பல கேள்விகள் கேட்டனர். அவர்களிடம், "நம்ம ஊர் ஆற்றிலே மார்பு அளவு தண்ணிர் போகிறது” என்று கூறி, மோதிரம் அணிந்திருக்கும் விரலை தன் மார்பில் வைத்துக் காட்டிக் கொண்டிருந்தான். அவன் மோதிரம் அணிந்திருப்பதை அவர்கள் பார்க்க வேண்டும் என்பது அவனுடைய ஆசை. 15 உணவு தயாராகிறதா? ஒரு கோயிலைச் சேர்ந்த ஆயிரம் கால் மண்டபத்தின் வாயிலில், அரசாங்க அதிகாரி ஒருவன் நின்று கொண்டு உரத்த குரலில், “சீக்கிரம் தயாராகட்டும். அரசர் வரப்போகிறார். ஊர் மக்கள் எல்லோருக்கும் உணவு அளிக்க வேண்டும்” என்று கூறி, பலருக்கு உத்திரவிட்டுக் கொண்டிருந்தான்.