பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

27 அந்த அதிகாரியின் பேச்சைக் கேட்கும் போது, மண்டபத்தின் உள்ளே ஊர் மக்களுக்கு உணவு தயாராகிக் கொண்டிருக்கிறதாகத் தெரியும். ஆனால், ஒருவர் பின்புற வழியாகப் போய்ப் பார்த்தார். அங்கே எதுவுமே நடைபெறவில்லை. திரும்பி வந்து, அந்த அதிகாரியிடம் “ஏன் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் அவர் “என்ன செய்வது? மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசரோ, நாடு செழிப்பாக இருக்கிறது. நாட்டில் பட்டினிச் சாவு ஏற்படாது என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதைத் தெரிவித்து மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தவே இவ்வாறு கூறினேன். இதுவும் அரசர் கட்டளைதான்” என்றான் அந்த அதிகாரி. 16 தன் பெயரைச் சொல்லாதவன் ஒரு ஊரில் சிலர் காசு வைத்து, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். - அவர்கள் போலீசுக்குப் பயந்து, வீட்டுக் கதவைத் தாழ்போட்டு வைத்திருந்தனர். சிறிது நேரத்தில், கதவைத் தட்டும் சத்தம் கேட்டது விளையாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் "யார் அது?” என்று கேட்டான் பதில் இல்லை. எனவே, போலிசாரோ என்று பயந்தனர் "கோவிந்தனா?” என்று கேட்டான் உள்ளே இருந்தபடியே. 'ஹூம்' என தலையை அசைத்தான், வெளியில் நின்றவன்.