பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/31

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28 “குமரனா?” என்று கேட்டான் உள்ளே இருந்தவன். “ஹூம்" என்று தலையை அசைத்தான் '"கேசவனா?” என்று கேட்டான் உள்ளே இருந்தவன். அதற்கும் ஹூம் என்றான். அடுத்து, “கிருஷ்ணனா?” என்று கேட்டான் உள்ளே இருந்தவன் "ஆம், அவனேதான்” என்று பதில் அளித்தான் வெளியில் நின்றவன். வேகமாகவும், கோபமாகவும் கதவைத் திறந்து, “முட்டாளே! முதலிலேயே பெயரைச் சொல்லியிருக்கலாமே. ஒவ்வொரு பெயராகக் கேட்கும் வரை, மரம் போல் நிற்கிறாயே?" என்று கடிந்து கொண்டனர் சீட்டு விளையாடியவர்கள். 17 தந்திரவாணன் செய்த தந்திரம் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆட்சி செய்து கொண்டிருந் தான். அமைச்சர்கள், அதிகாரிகள், சேனாதிபதி முதலானோர் இருந்தனர் அந்த நாட்டில் தந்திரவாணன் என்பவன் ஒருவன் இருந்தான் குறுக்கு வழியில் திடீரென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. ஆனால், மோசடி, கலப்படம், கடத்தல் முதலான வழிகளில் ஈடுபட அவன் விரும்ப வில்லை. எதையுமே தந்திரமான வழிகளிலேயே செய்ய வேண்டும் என்பது அவன் நோக்கம்.