பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33



“சில நாட்களாக வீரன் காட்டுக்குப் போகாமல், விறகு வெட்டி வராமல், எப்படி சுகமாக வாழ்கிறான்” என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர் அவனுடைய உறவினர்கள். அதோடு அக்கம் பக்கத்தில் உள்ளோரும் பேசலானார்கள்.

ஒரு நாள் வீரனிடமே அதைக் கேட்டு விட்டனர்.

வீரனுக்கு மகிழ்ச்சியும் மதிப்பும் அதிகரிக்கவே, சிறிது அதிகமாகவே மது அருந்தி, ஆடிப் பாடத் தொடங்கினான். அதோடு கூட அமுத சுரபிப் பாத்திரத்தையும் தோளில் வைத்துக் கொண்டு, ஆடிப்பாடி குதித்தான். அமுத சுரபிப் பாத்திரம் கீழே விழுந்து நொறுங்கியது.

வீரன் மிகவருத்தமுற்றான். முன்போலவே காட்டுக்கு விறகு வெட்டி வரச் சென்றான்.

பொருளின் அருமை தெரியாதவனிடம் பொருள் தங்குவது இல்லை.

19
ஒரு கடனை தீர்க்க மற்றொரு கடனா?


தொழிற் சாலையில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவன் சூதாடி, கடனாளி ஆகி விட்டார். கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் திண்டாடினான்.

கடன் கொடுத்தவரோ தொல்லைப்படுத்தினார், நெருக்கினார். தன்னோடு வேலை செய்யும் சக தொழிலாளியிடம் சென்று கடன் தந்து உதவும்படி வேண்டினான்.

“என்ன தேவைக்குக் கடன் கேட்கிறாய்?” என்று கேட்டார் அவர்

3