பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


“பால் போல் இருக்கிறது!” என்றார் ஒருவர்

“முத்துப் போல் இருக்கிறது!” என்றார் வேறொருவர்.

“தெளிவாய் இருக்கிறது!” என்றார் மற்றொருவர்.

அவர்கள் அளித்த பதில்கள் பண்ணையாருக்கு திருப்தி அளிக்கவில்லை அருகில் நின்று கொண்டிருந்த கணக்கரைப் பார்த்தார்.

“பண்ணையார் அவர்களே! தண்ணீர் கரையிலேயே இருக்கிறது” என்றார் கணக்கர்.

‘'ஏரித் தண்ணீர் சுருங்கி விட்டதா? விவசாயத்துக்குப் போதுமா!’ என்ற கருத்தில் கேட்டார் பண்ணையார்.

‘'கரையிலேயே இருக்கிறது'’ என்றால், போதுமான அளவு நீர் உள்ளது என்று புரிந்து கொண்டார் பண்ணையார்.

21
சுவையான உணவுக்கு ஏங்கிய ஆண்டிகள்


ஒரு ஊரில், ஆண்டிக் கோலத்தில் இருவர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து உண்டு, ஒரு சத்திரத்தில் படுத்துக் கொள்வார்கள்.

உடல் உழைப்பு எதுவும் இல்லாததால், அவர்களின் உடல் கொழுத்துப் பருத்துக் காணப்பட்டது.

அந்த ஆண்டிகளை தினந்தோறும் பார்த்த இரண்டு தொழிலாளர்களில் ஒருவன், “இந்த ஆண்டிகளால் சமுதாயத்துக்கு என்ன நன்மை? உடல் ஊனம் அடைந்தவர்கள் கூட, ஏதேனும் வேலை செய்து பிழைக்கிறார்களே! இவர்கள் ஏன் பிச்சை எடுத்து உண்டு திரிகிறார்கள்? என்று கேட்டான்.