பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


22
நிலம் யாருடையது?


பல ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவின் ஜேட்புரி என்னும் ஊரில் ஒரு வழக்கு, நீதி மன்றத்தில் நடைபெற்றது.

தண்ணீர் தொட்டியின் அருகில் உள்ள நிலம் சம்பந்தமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு வழக்கு.

அந்த நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது பற்றி வாதாடினார்கள். ஆனால், இருதரப்பினருக்கும் ஆவணங்கள் ஆதாரங்கள் எதுவுமில்லை.

95 வயதுள்ள தாவூத்பீகாவும், ஆபா அபுவும் எப்படிச் சொல்கிறார்களோ, அப்படியே நடந்து கொள்கிறோம்” என்று இந்துக்கள் கூறினார்கள்.

அந்த இரண்டு முஸ்லீம் கனவான்களும் “அந்த நிலம் இந்துக்களுக்குத்தான் சொந்தம்” என்று சொன்னார்கள்.

எத்தகைய உயர்வான நியாயமான எண்ணம் கொண்டிருந்தனர் என்பதை நினைக்கும்போது உள்ளம் நெகிழ்கிறது.

23
மோசம் செய்யக் கூடாது


ஒரு ஊரில் செட்டியார் ஒருவர் சிறு சிறு தொகையை வட்டிக்குக் கொடுப்பார். ஆனால், வட்டி அதிகமாக வாங்குவார். அவசரமான வேளைகளில், சிறு வியாபாரிகள் அவரிடம் சென்று கடன் வாங்குவார்கள்.