பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


எத்தகைய பரந்த உள்ளம். அதை நினைக்கும் போது மனம் நெகிழ்கிறது.

25
தந்தை செய்த தந்திரம்


ஒரு சிற்றூரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்கள் நால்வரும் படிக்க விருப்பம் இல்லாமல், ஊர் சுற்றித் திரியலானார்கள்.

தன்னுடைய நிலத்தை உழுது பயிர் செய்தாலும், குத்தகைக்கு விடுவதற்குப் பதிலாக, லாபம் கூடுதலாகக் கிடைக்குமே என்று விவசாயி கவலைப்பட்டார். மேலும், அவர்கள் எப்படி வாழப் போகிறார்களோ என்று வருந்திக் கெண்டிருந்தார்.

ஒரு நாள், மூத்த மகனைக் கூப்பிட்டு, “உன் தாய் இறந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. அவள் அணிந்திருந்த நகைகள் எல்லாவற்றையும் ஒரு குடத்தில் வைத்து, ஊருக்கு வெளியே இருக்கும் நம்முடைய காலியான தோட்டத்தில் புதைத்து வைத்தேன். எனக்கு வயதாகி விட்டது, அதை எடுத்து இப்போது உங்களுக்குப் பங்கு பிரித்து தரலாம் என்று நினைக்கிறேன். ஆனால், எந்த இடத்தில் புதைத்து வைத்தேன் என்பது எனக்கு நினைவு இல்லை, கூலிக்கு ஆள்பிடித்து, மண்ணைத் தோண்டச் செய்து, அதை எடுப்போமானால், தகவல் தெரிந்து, அரசு அதிகாரிகள் வந்து பறிமுதல் செய்து கொண்டு போய் விடுவார்களே என்று பயமாக இருக்கிறது” என்றார்.

நகைகள் என்று சொன்னதும், அவனுக்கு ஆசை மேலிட்டது.

“அப்பா! வேறு ஆள் வேண்டாம், நானே தோண்டுகிறேன்” என்று கூறி, உடனே மண்வெட்டி எடுத்துக் கொண்டு போய்