பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

மண்ணைத் தோண்டத் தொடங்கினான்.

மற்ற மூவரும், ‘அவன் எதற்காகத் தோண்டுகிறான்? வேலையே செய்யாதவன், இப்போது உழைப்பதற்கு என்ன காரணம்’ என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர்.

அதை அறிந்த தந்தை, மூத்த மகனிடம் சென்ன தகவலை, மற்ற மூவரிடமும் கூறினார்.

அவர்களுக்கும் ஆவல் உண்டாயிற்று; ஆளுக்கு ஒரு மண்வெட்டி எடுத்துக் கொண்டு சென்று, தோண்டினார்கள்.

இரண்டு ஏக்கர் நிலத்தையும், இரண்டு மூன்று அடி ஆழத்துக்குத் தோண்டி விட்டார்கள். ஆனால், எதிர்பார்த்த குடமோ அகப்படவில்லை. கவலை உண்டாயிற்று.

“நம்முடைய சொத்து, நமக்குக் கிடைக்காமல் போகாது; இப்போது கிடைக்கா விட்டாலும், பிறகாவது கிடைக்கும். இரண்டு ஏக்கர் நிலத்தை தோண்டியதால் எவ்வித நட்டமும் இல்லை. அதற்குப் பதிலாக, இப்போது வேர்க்கடலை பயிரிட்டால் நல்ல பலன் உண்டு; அது ஒரு குறுவைப் பயிர்; அதைப் பயிரிட்டால், மூன்று மாதங்களில் நல்ல லாபம் கிடைக்கும்” என்றார் தந்தை.

அவர் சொன்னபடியே, வேர்க்கடலை பயிரிட்டு, நல்ல லாபம் கிடைத்தது. தங்கள் உழைப்பு வீணாகவில்லை, புதைத்து வைத்தது கிடைக்கவில்லை என்றாலும், பயிரில் அதற்கு இணையாகப் பலன் கிடைத்ததை நினைத்தார்கள்.

தந்தையின் தூண்டுதல் இல்லாமலேயே, அவர்கள் நால்வரும் விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி, உழைத்து மகிழ்ந்தனர்.

மக்களை, விவசாயத்தில் எவ்வாறு அக்கறை கொள்ளச் செய்யலாம் என்று தான், செய்த தந்திரம், எளிதில் வெற்றி பெற்றதை நினைத்து, அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

உழைத்து உண்பதில் காணும் மகிழ்ச்சியே மகிழ்ச்சி!