பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


“நான் வீட்டை மட்டுமே உங்களுக்கு விற்றேன், அதில் இருக்கும் பொருள்கள் என்னைச் சேர்ந்ததே. அதை நான் எடுத்துக் கொள்வதுதான் நியாயம்” என்று வாதாடினார் வீட்டை விற்றவர்.

இருவரும் ஊர்ப்பஞ்சாயத்தாரிடம் சென்று முறையிட்டனர். “வீட்டில் உள்ள பொருள், வீட்டை வாங்கியவருக்கே உரியது” என்று தீர்ப்புக் கூறினார் பஞ்சாயத்தார்.

இரண்டு மாதங்களில் அவர்களின் போககு எப்படி மாறிவிட்டது!

28
நன்றி இல்லாதவன்


இளவரசன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான்.

ஒரு மானைத் துரத்திக் கொண்டு வெகு தொலைவு சென்று விட்டான். அவனுக்குத் துணையாக வந்த காவலர்களைப் பிரிய நேர்ந்தது.

இருள் சூழ்ந்தது. அப்போது ஒரு சிங்கம் எதிரே வருவதைக் கண்டு, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிப் பதுங்கிக் கொண்டான். அதே சமயம், அந்த மரத்தில் கரடி ஒன்று இருப்பதைக் கண்டு பயந்து நடுங்கினான்.

சிங்கத்திடமிருந்து தப்பி, கரடிக்குப் பலியாகப் போகிறோமே என்று கவலையில் ஆழ்ந்தான் இளவரசன். கரடி அவனுக்கு ஆறுதல் அளித்தது.

நள்ளிரவு ஆகியது. மரத்தடியில் இருந்த சிங்கம் நகரவே இல்லை, எப்படியும் இரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தது.