பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


“எனக்குப் பயந்து நீ மரத்தில் ஏறிவிட்டாய். ஆனால், கரடியிடம் இருந்து தப்ப முடியாது. நான் போனபின், கரடி உன்னைக் கொன்றுவிடும். நீ உயிர் பிழைக்க வேண்டுமானால் கரடியைக் கீழே தள்ளிவிடு” என்று நயவஞ்சகமாகக் கூறியது சிங்கம்.

அது சொன்னதை நம்பி, தன் உயிரே தனக்குப் பெரிது என்று எண்ணி, கரடியைக் கீழே தள்ள முற்பட்டான் இளவரசன்.

அரைகுறைத் தூக்கத்தில் இருந்த கரடி, மற்றொரு கிளையைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் தப்பித்துக் கொண்டது.

இளவரசனின் நம்பிக்கைத் துரோகத்தைக் கண்டு கரடி வருந்தியது.

“அடே துரோகி! நட்பு எத்தகையது என்பதை உணராமல், கலக்கமுற்று, துரோகம் செய்ய முற்பட்டு விட்டாய். அதனால், உன் புத்தியும் அடியோடு கலங்கி அலைவாய்” என்று சபித்தது கரடி.

இளவரசனின் மனச் சாட்சி உறுத்தியது. பைத்தியம் பிடித்தவனைப் போல் ஆனான்.

29
ஏமாந்த ஓநாய்


ஒரு கிராமத்தில் பசியோடு அலைந்து கொண்டிருந்தது ஓர் ஓநாய், உணவு எதுவும் கிடைக்கவில்லை.

கிராமத்தின் கோடியிலிருந்த குடிசைக்கு அருகில் வந்து கொண்டிருந்தது.

குடிசையினுள் சின்னஞ்சிறு பையன் அழுது கொண்டிருந்தான்.