பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 கிழவி எவ்வளவோ சமாதானப்படுத்தியும், பையனின் அழுகை நிற்க வில்லை. “நீ அழுகையை நிறுத்தாவிடில், உன்னை ஓநாயிடம் தூக்கிப் போட்டு விடுவேன்” என்று பலமுறை சொல்லி பயமுறுத்தினாள் கிழவி. அதைக் கேட்டதும் ஒநாய் மேற்கொண்டு செல்லாமல், குடிசைக்கு வெளியே படுத்து விட்டது. கிழவி, பையனை எப்பொழுது வெளியே போடுவாள் என்று ஒநாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இரவு வெகுநேரம் அகிவிட்டது. ஒநாயோ காத்துக் கொண்டிருந்தது. திடீரென்று குடிசைக்குள்ளிருந்து கிழவியின் குரல் கேட்டது. “என் கண்ணே நீ தூங்கு! உன்னை ஓநாயிடம் போட மாட்டேன். அந்த ஒநாய் இந்தப் பக்கம் வரட்டும் அதை அடித்துக் கொன்று விடுவோம்.” என்றாள் கிழவி. அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒநாய், "மக்கள் பேசுவது ஒன்று செய்வது வேறாக இருக்கிறதே" என்று எண்ணிக் கொண்டே எழுந்து, கிராமத்தை விட்டு வெளியேறியது. 30 பொய் சொன்ன வியாபாரி வியாபாரி ஒருவன் பயணம் செல்லும்போது, தன்னுடைய பணப்பையை இழந்து விட்டான். தன்னுடைய பணப்பையில் இரண்டாயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும், அதைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு, 500 ரூபாய் பரிசு அளிப்பதாகவும் அறிவித்தான். ஒரு தொழிலாளியின் கையில் அந்தப் பை அகப்பட்டது.