பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5{} தந்தையும், மகனும் கிராமத்துக்கு விரைந்து வந்து, நடத்த வேண்டிய சடங்குகளை செய்து முடித்தனர். கிராம மக்கள் அனைவரும் சிறுவனைப் பாராட்டினார்கள். புரோகிதர் மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிறை சென்றார். 32 யானையை ஏமாற்றிய நரி ஒரு காட்டில் பல நரிகள் வசித்தன. அவை தின்பதற்கு சின்னஞ்சிறு விலங்குகளும், பறவைகளும் கிடைக்கவில்லை. நரிகள் பட்டினியால் வாடின. கிழட்டு நரிக்கு ஒரு யோசனை தோன்றியது. சிறிது தொலைவு சென்று ஒரு யானையைக் கண்டது. கிழட்டு நரி, சிறிது தூரத்தில் நின்று கொண்டே, “மிகப் பெரிய வல்லமை வாய்ந்த யானையே! உங்களின் தகுதிக்கு ஏற்ப, பெரிய பதவி தருவதற்காக தங்களை அழைத்துச் செல்ல நான் வந்துள்ளேன். அதாவது, “எங்களுக்கு ஒர் அரசன் இருந்தான். அவன் மிகவும் தீயவனாகி, எங்களால் இயலாத பணிகளை எல்லாம் செய்யும்படி ஏவி, தொல்லை கொடுத்தான், ஆகையால், அவனை ஒதுக்கி விட்டு, வேறு ஓர் அரசனை தேர்ந்தெடுக்கத் தீர்மானித்து உள்ளோம். எங்கள் இனத்தவர்கள் உங்களை அழைத்து வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள். எங்களுடன் வாழ்வது உங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் இடும்