பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5} கட்டளைகளை எல்லாம் பணிவோடு நிறைவேற்றுவோம். உங்களை மதிப்புடன் நடத்துவோம். ஆகையால், நீங்கள் எங்கள் ராஜ்யத்திற்கு வரவேண்டும்” என்று வேண்டிக் கொண்டது. யானைக்கு மகிழ்ச்சி உண்டாகி, கிழட்டு நரியுடன் புறப்பட்டது. வழியில், ஒரு சதுப்பு நிலத்தில் யானையின் கால்கள் சேற்றிலே அழுந்தி விட்டன. யானையால் வெளியேற முடியவில்லை. அப்பொழுது நரி, யானையைப் பார்த்து, இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? உங்கள் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கிறேன்” என்று கூறியது. “இந்தச் சேற்றிலிருந்து என்னை வெளியே இழுக்க வேண்டும் இதுதான் என் கட்டளை” என்று சொல்லியது யானை, நரி சிரித்துக் கொண்டே, 'உங்கள் தும்பிக்கையால் என் வாலைப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் உடனே வெளியே இழுத்து விடுகிறேன்” என்று கூறியது. “உன்னுடைய வாலால் என்னை வெளியே இழுக்க முடியும் என்று எண்ணுகிறாயா?” என்று கேட்டது யானை. “அது இயலாத செயல் என்றால், அதைச் செய்யுமாறு எனக்கு ஏன் கட்டளையிட்டீர்கள்? இந்த மாதிரிக் கட்டளையிட்டதற்காகத் தானே பழைய அரசனை நாங்கள் விரட்டி விட்டோம்!” என்றது கிழட்டு நரி. யானை சேற்றிலிருந்து வெளியேற முடியாமல், துன்புற்று இறந்தது. நரிகள் எல்லாம் வந்து, யானையைத் தின்று விட்டன! புதியவர்களின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாறக் கூடாது.