பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்குள் அவன் தங்கியிருந்த உறவினனுக்குத் தகவல் எட்டி, அவனும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். விசாரித்தான். இருவரும் வீட்டுக்குச் சென்றனர். “நியாயமாகச் சம்பாதித்திருந்தால் பொருள் கிடைக்கும்” என்றான் ஒருவன். “கீழே விழுந்த பொருள், எங்கேயாவது கிடைத்தது உண்டா?” என்றான் மற்றொருவன். “அவனுக்கு என்ன பட்டனவாசி, அங்கே போய், வேறு மோதிரம் வாங்கிப் போட்டுக் கொள்வான்” என்றான் வேறொருவன் இப்படியாக பலர் பேசலானார்கள். “இரவு நான் புறப்படுகிறேன். எனக்கு ஐநூறு ரூபாய் கடனாகக் கொடு, போனதும் அனுப்புகிறேன்” என்றான் பட்டண வாசி. ஐயோ பாவம்! அவன் தான் மோதிரத்தைத் தொலைத்து விட்டானே அவனுக்குக் கொடுக்காமல் இருக்கலாமா? பெருந்தன்மையோடு, “என்னிடம் நூறு ரூபாய் தான் இருக்கிறது” என்று கூறி, நூறு ரூபாயைக் கொடுத்தான் கிராமத்து உறவினன். பட்டனத்தானின் மோதிரம் தொலைந்தது உண்மையோ, பொய்யோ என்று பாராமல் கிராமத்து நண்பன் பெருந்தன்மையோடு நடந்து கொண்டான்.