பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கணவன் அமைதியாக, "இரண்டு மொட்டைக்கு, ஒரு மொட்டை இலவசம்’ என்றான் சவாத் தொழிலாளி. அதனால் நானும் மொட்டை போட்டுக் கொண்டேன்” என்றான். மனைவி அமைதியானாள். இலவசம்’ என்றாலே சிலருக்கு மகிழ்ச்சி உண்டாகும். 36 எல்லோருக்குமே பேப்பே தான்! செட்டியார் ஒருவர் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தார் கரும்புகளையும், நெல்லையும் கொள்முதல் செய்தார். ஆலைகளுக்கு மாட்டு வண்டியில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தார். அது கெளரவமாகத் தோன்றவில்லை. அதனால் இரண்டு லாரிகள் வாங்கி அதில் சரக்குகளை அனுப்பிக் கொண்டிருந்தார். நல்ல லாபமும் கிடைத்தது. சில மாதங்களுக்குப் பிறகு, இரண்டு லாரிகளும் விபத்துக்குள்ளாகி, பெருத்த சேதம் ஆயின. கரும்பு அனுப்புவதும் தடைப்பட்டது. நெல் விலையும் குறைந்தது. வியாபாரம் சரியாக நடைபெறவில்லை. பெருத்த த டம் உண்டாயிற்று. கடன்களை செலுத்த முடியவில்லை, செட்டியார் திணறினார். தன்னுடைய நண்பர் வழக்கறிஞரிடம் சென்று, நிலைமையைக் கூறி, அவரிடம் ஆலோசனை கேட்டார் அவர், “ இந்தக் கடன் தொல்லையிலிருந்து மீள ஒரு வழி உண்டு;