பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 மாப்பிள்ளையின் தாய், சிரித்துக் கொண்டே, “நீங்கள் தந்த பட்டியலில் ஏதேனும் விட்டுப் போயிருந்தால், அதற்காகச் சண்டைபோடுவோம்” என்றாள். அடுத்து, மாப்பிள்ளையின் தந்தை “நீங்கள் போட்ட நகைகள் அனைத்தும் எடை சரியாக இருக்கிறதா என்று நிறுத்துப் பார்ப்போம்” என்றார். இப்படி, "அவ நம்பிக்கையான உங்கள் வீட்டுச் சம்பந்தம் எங்களுக்குத் தேவையே இல்லை” என்று கூறிவிட்டனர் பெண்ணின் பெற்றோர். பெண் வீட்டாரிடம் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்பதே மாப்பிள்ளை வீட்டாரின் திட்டம். 38 முன்போலவே பழைய காகித விற்பனை ஒருவன் தெருத் தெருவாகச் சென்று, பழைய பேப்பர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்களை வாங்கி, கடையில் விற்று, அந்த வருமானத்தில் சாப்பிட்டு வந்தான். சில மாதங்களில் அவனுக்குக் கொஞ்சம் பணம் சேர்ந்தது. பழைய பேப்பர் வியாபாரத்தை விட்டு விட்டு, கண்ணாடிப் பாத்திரங்களை வாங்கி, கூடையில் வைத்து வியாபாரம் செய்யலானான். ஒரு நாள் மிகவும் களைத்துப் போய், கூடையை தரையில் வைத்து விட்டு, இளைப்பாறினான். அப்படியே கண் அயர்ந்தான். அதோடு அப்படியே கற்பனையில், மனக் கோட்டை கட்டத் தொடங்கினான். “பழைய பேப்பர் வியாபாரத்தில் கொஞ்சமாகத் த