பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மறு நொடியில் தங்க வில்வப்பழம் ஒன்று தோன்றியது. அதைத் தெடர்ந்து அக்கினி தேவனும் தோன்றினான். "உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டான் அரசனிடம். அரசன் அக்கினி தேவனை வணங்கி, "இதோ நிற்கும் அந்தணன் நினைப்பதுபோல் கிடைக்க வேண்டும் என்பதுதான் தாங்கள் அருள வேண்டிய வரம்” என்று அந்தணனுக்காகப் பரிந்து வேண்டினான் அரசன். "அப்படியே ஆகக் கடவது. மேலும், நீயும் செழிப்போடு வாழ்வாயாக! உன் அரண்மனைக் கருவூலம் எப்பொழுதும் நிறைந்தே இருக்கும்” என்று அரசனுக்கு (அந்தணனுக்கும் சேர்த்து) வரம் அருளினான். அதைக்கண்டு வியப்புற்ற அந்தணனுக்கு பொறாமையும் உருஎடுத்தது 'அக்கினி தேவனே! நான் வெகு நேரமாகத் தவம் செய்து கொண்டிருந்தேன். எனக்குக் காட்சி அளிக்கவில்லை. அரசனுக்குச் சிறிது நேரத்திலேயே காட்சி அளித்திரே! அது ஏன்?” என்று கேட்டான் அந்தணன். "அந்தணனே! உலகில் வலிமைமிக்க ஆற்றலுக்கே விரைவில் வெற்றி கிட்டும். தவிர, உன்னைப் போன்ற சுயநலம் கொண்ட மந்தபுத்தியுள்ள சோம்பேறிக்கு அவ்வாறு கிடைக்காது. மற்றும் கர்வமும், அலட்சியமும், பொறாமையும் உன்னிடம் குடிகொண்டு உள்ளது என்று கூறி, அக்கிணிதேவன் மறைந்து விட்டான். (அக்கினி தேவன் தோன்றுகிறாரோ இல்லையோ) வலிமைமிக்க ஆற்றல், உறுதியான உள்ளம், சுயநலமின்மை, பிறருக்காக வேண்டுதல் இவை இந்தக் கதையில் சிறந்து விளங்குகின்றது