பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 40 கணவனை பயமுறுத்தும் மனைவி ஒரு ஊரில், கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். கணவன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வருமானம் மிகவும் குறைவாகவே கிடைத்துக் கொண்டிருந்தது. 'அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் அந்தப் பொருள் வாங்கியுள்ளனர், நாம் இப்படி எந்தப் பொருளும் வாங்காமல் ஏழ்மை நிலையில் இருக்கிறோமே, நமக்கு எப்போதுதான் நல்ல காலம் வரப்போகிறதோ என்று மனைவி சதா புலம்பிக் கொண்டிருந்தாள். இப்போது நாம் பட்டினி கிடக்காமல், ஏதோ வயிறாரச் சாப்பிடுகிறோம் அல்லவா? அதை நினைத்து, மகிழ்ச்சியாக இருப்பதே நல்லது என்று கணவன் ஆறுதலாகக் கூறுவான். மனைவி அதை ஏற்காமல், அவனை நச்சரித்துக் கொண்டே இருந்தாள். அவன் ஒருநாள் பொறுமை இழந்து, “உன் தாய் வீட்டுக்குப் போய், சில நாட்கள் தங்கியிருந்து வந்தால் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. மாற்றம் மகிழ்ச்சியைத் தரும்” என்றான். அதைக் கேட்டதும், அவள் பெரிய கூச்சல் போடலானாள், "என்னை, என் தாய் வீட்டுக்கு ஒட்டிவிட்டு, எவளையாவது ஒருத்தியைக் கூட்டி வந்து கும்மாளம் அடிக்கப் பார்க்கிறாயா?” என்று கத்தினாள். அத்துடன் “இதோ கிணற்றில் போய் விழுகிறேன்” என்று கூவிக் கொண்டு கொல்லையில் இருக்கும் கிணற்றுக்கு விரைந்தாள்.